Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உதவி செய்த விராட் கோலி.. அனுஷ்கா சர்மாவா இது.. அதுவும் வயிற்றில் குழந்தையோடு.. என்ன நடந்தது?

டெல்லி: நடிகையும், கிரிக்கெட் விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா சர்மா வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.

நடிகர் அனுஷ்கா சர்மாவிற்கும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலிக்கும் கடந்த 2017ம் வருடம் திருமணம் நடந்தது. பல வருடங்களாக காதலில் இருந்த இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த நிலையில் தற்போது அனுஷ்கா சர்மா கர்ப்பமாக இருக்கிறார்.

அனுஷ்கா சர்மா

அனுஷ்கா சர்மா

அனுஷ்கா சர்மா கர்ப்பமாக உள்ள நிலையில் ஆஸ்திரேலிய தொடரில் இருந்து விராட் கோலி பாதியில் வெளியேற உள்ளார். டெஸ்ட் தொடரில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே விராட் கோலி விளையாடுவார். அதன்பின் பிசிசிஐ அமைப்பிடம் பேரு கால விடுப்பு கேட்டு உள்ளார்.

குழந்தை பிறக்கும்

குழந்தை பிறக்கும்

அனுஷ்கா சர்மாவிற்கு குழந்தை பிறக்கும் போது உடன் இருக்க வேண்டும் என்பதற்காக கோலி விடுப்பு எடுக்க முடிவு செய்துள்ளார். இந்த நிலையில் விராட் கோலியோடு இணைந்து அனுஷ்கா சர்மா வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.

புகைப்படம்

புகைப்படம்

இந்த புகைப்படத்தில் அனுஷ்கா சர்மா யோகாசனம் செய்கிறார். மிகவும் கடினமான சிரசாசனம் செய்துள்ளார். தலைகீழாக நின்று காலை மேலே தூக்கி அனுஷ்கா சர்மா இந்த யோசனம் செய்துள்ளார். இவருடன் கோலி உதவிக்கு நின்றார்.

உதவி

உதவி

அனுஷ்கா சர்மாவின் காலை பிடித்துக்கொண்டு உதவிக்காக கோலி உடன் இருந்தார். இந்த புகைப்படத்தை பகிர்ந்த அனுஷ்கா சர்மா, நான் பல வருடமாக யோகாசனம் செய்து வருகிறேன். எல்லா யோகாசனமும் எப்போதும் போல நான் செய்யலாம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதனால் தொடர்ந்து யோகாசனம் செய்து வருகிறேன்.

இன்று செய்தார்

இன்று செய்தார்

இன்று எனது கணவரின் உதவியுடன் யோகாசனம் செய்தேன். எனக்கு கூடுதல் பாதுகாப்பாக கணவர் உதவி செய்தார். நான் யோகா செய்யும் போது, என்னுடைய யோகா டீச்சரும் உடன் இருந்தார். என்னுடைய உடல் பயிற்சியை தொடர்வதில் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்று, அனுஷ்கா சர்மா தனது போஸ்டில் குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Tuesday, December 1, 2020, 15:34 [IST]
Other articles published on Dec 1, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+