Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்ன இப்படி இறங்கிட்டாரு.. விட்டா கோலி சிஎஸ்கேவிற்கு வந்துடுவார் போல.. இதை பாருங்க.. வைரல் போட்டோ

சென்னை; இந்தியா இங்கிலாந்து இடையில் சென்னையில் நடக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கேப்டன் கோலி செய்த காரியம் பெரிய வைரலாகி உள்ளது.

இந்தியா இங்கிலாந்து இடையிலான இரண்டாவது டெஸ்ட் பரபரப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இதில் இங்கிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.

இந்திய வீரர் அஸ்வின் சிறப்பாக பவுலிங் செய்து 3 விக்கெட் எடுத்துள்ளார். இங்கிலாந்து அணி 6 விக்கெட்டிற்கு 87 ரன்கள் எடுத்துள்ளது.

எப்படி

எப்படி

இந்தியா இங்கிலாந்து இடையில் சென்னையில் நடக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கேப்டன் கோலி செய்த காரியம் பெரிய வைரலாகி உள்ளது. இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி ரசிகர்களுக்கு முன்னிலையில் நடந்து வருகிறது. 50 ரசிகர்கள் இந்த போட்டியை காண அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

அனுமதி

அனுமதி

இந்த நிலையில் ரசிகர்களுக்கு முன்னிலையில் போட்டி நடப்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இந்திய வீரர்களுக்கு ரசிகர்கள் பெரிய அளவில் ஊக்கம் கொடுத்து வருகிறார்கள். ஒவ்வொரு வீரருக்கும் ஊக்கம் கொடுக்கும் வகையில் சென்னை ரசிகர்கள் கோஷம் எழுப்பி வருகிறார்கள்.

கோஷம்

கோஷம்

இந்த நிலையில் சென்னையின் ரசிகர்களை கேப்டன் கோலி பெரிய அளவில் என்ஜாய் செய்தார். சென்னை ரசிகர்கள் ஒவ்வொருமுறையும் கை தட்டும் போது அவர்களை கூடுதலாக கைதட்டும்படி கோலி கூறினார். இந்த நிலையில் இடையில் சில ரசிகர்கள் சிஎஸ்கே, சிஎஸ்கே என்று கத்தினார்கள்.

மைதானம்

மைதானம்

இதனால் உடனே மைதானம் மொத்தமும் சிஎஸ்கே, சிஎஸ்கே என்று கத்தியது. இதை கேட்டு உற்சாகம் அடைந்த கோலி சென்னை ரசிகர்களை விசில் அடிக்கும்படி கூறினார். சிஎஸ்கே அணிக்கு விசில் போடுங்க என்று சொல்வது போல கோலி சென்னை ரசிகர்களை பார்த்து விசில் அடிக்கும்படி கூறினார்.

விசில்

இதை பார்த்து சென்னையில் கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் மைதானத்தில் விசில் அடிக்க தொடங்கினார்கள். இந்த புகைப்படம் தற்போது இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. சிஎஸ்கேவிற்கு ஆதரவாக கோலி இன்று குரல் கொடுத்தது பெரிய அளவில் வைரலாகி வருகிறது.

Story first published: Sunday, February 14, 2021, 16:28 [IST]
Other articles published on Feb 14, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+