
டெஸ்ட்
இந்த டெஸ்டில் இன்று முதல் ஓவரில் இருந்தே அஸ்வின் சிறப்பாக பவுலிங் செய்தார். இங்கிலாந்து வீரர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் அஸ்வின் பவுலிங் செய்தார். அதிலும் லாரன்ஸ், ரூட் ஆகியோருக்கு இவர் பவுலிங் செய்த விதம் நன்றாக இருந்தது.

அஸ்வின்
இப்படி அஸ்வின் வீசிய கணிக்க முடியாத பதில்தான் லாரன்ஸ் அவுட் ஆனார். அதன்பின் ஸ்டோக்ஸ் பேட்டிங் இறங்கிய பின்பும் அஸ்வின் இதேபோல்தான் தொடர்ந்து பவுலிங் செய்து வந்தார். இது கோலிக்கு பெரிய அளவில் நம்பிக்கை கொடுத்தது.

ஸ்டோக்ஸ்
அதிலும் ஸ்டோக்ஸுக்கு இவர் மிக சரியான லைனில் பவுலிங் செய்தார். முதல் இன்னிங்சில் எந்த பாலில் விக்கெட் எடுத்தாரோ அதே லைனில் அஸ்வின் பவுலிங் செய்தார். இதை பார்த்து கோலி உற்சாகம் அடைந்தார்.

எதிர்பார்க்காத வகை
யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென அஸ்வினை பார்த்து கோலி.. நல்லா இருக்கு ஆஷ் என்று தமிழில் சொன்னார். இதை அஸ்வின் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. என்ன கேப்டனா இப்படி தமிழில் பேசுவது என்று அஸ்வின் ஆடிப்போனார் .

மயங்க்
இந்திய அணியில் மயங்க், சுந்தர், ராகுல், ஷமி, நடராஜன், விஹாரி போன்ற வீரர்கள் தமிழில் பேசுகிறார்கள்.இவர்களிடம் இருந்து கோலி இந்த வார்த்தை கற்றுக்கொண்டு இருக்கலாம். கோலி இப்படி திடீரென தமிழில் பேசியதை நம்ப முடியாமல் ஒரு நிமிடம் மயங்க் அகர்வால் வாயை பிளந்து பார்த்துக் கொண்டு இருந்தார்.


Click it and Unblock the Notifications