Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முகத்தில் சோகம் ததும்ப.. என்ன ஒரு மேட்ச் தோத்ததுக்கே கோலி இப்படி சொல்லிட்டாரே.. எதோ நடக்க போகுது!

சென்னை: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு என்ன காரணம் என்று கோலி குறிப்பிட்டுள்ளார்.

இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்துள்ளது. ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்திய இந்திய அணி தற்போது படுதோல்வி அடைந்துள்ளது.

ஒரு கேப்டனாக கோலிக்கு இது பெரிய பின்னடைவை கொடுத்துள்ளது. மீதம் உள்ள 3 டெஸ்ட் போட்டிகளில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது.

 இந்திய அணி

இந்திய அணி

இந்திய அணியின் தோல்விக்கான காரணங்களை கோலி முகத்தில் சோகம் ததும்ப பட்டியலிட்டார். அவர் தனது பேச்சில், பிட்சில் பெரிதாக எதுவும் நடக்கவில்லை. முதல் இரண்டு நாட்களில் எங்களுக்கு எதுவும் சாதகமாக இல்லை. இங்கிலாந்து அணியை பாராட்ட வேண்டும். பெரிய டோட்டல் எங்களுக்கு கொடுத்து பிரஷர் கொடுத்தனர்.

பிட்ச்

பிட்ச்

பிட்ச் மிகவும் ஸ்லோவாக இருந்தது. வீரர்களுக்கு பிட்ச் அதிகம் உதவி செய்யவில்லை. இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் மிக எளிதாக ரன்களை எடுத்தனர். பிட்ச் எங்களுக்கு சாதகமாக இல்லை. இது பெரிய அளவில் எங்களுக்கு எதிராக திரும்பியது.

பாடி லாங்குவேஜ்

பாடி லாங்குவேஜ்

எங்களின் பாடி லாங்குவேஜ் , இன்டன்சிட்டி நினைத்த அளவிற்கு இல்லை. இரண்டாவது இன்னிங்சில் கொஞ்சம் நன்றாக ஆடினோம். ஆனால் அதிலும் பேட்டிங் சரியாக இல்லை.

முதல் 4 பேட்ஸ்மேன்கள்

முதல் 4 பேட்ஸ்மேன்கள்

முதல் 4 பேட்ஸ்மேன்கள் பெரிய அளவில் இந்திய அணியின் வெற்றிக்கு உதவி செய்யவில்லை. நாங்கள் எதை எல்லாம் நன்றாக செய்தோம், செய்யவில்லை என்பதை ஆராய வேண்டும். நாங்கள் செய்த தவறுகளை களைய வேண்டும்.

மீதம் உள்ள போட்டி

மீதம் உள்ள போட்டி

மீதம் இருக்கும் மூன்று டெஸ்ட்களில் நாங்கள் கண்டிப்பாக மீண்டு வருவோம். கண்டிப்பாக இந்த தோல்விக்கு பதிலடி கொடுப்போம். எங்களின் தவறுகளை சரி செய்துவிட்டு களமிறங்குவோம் என்று கோலி குறிப்பிட்டுள்ளார்.

கோலி பேச்சு

கோலி பேச்சு

கோலி தனது பேச்சில் சென்னை பிட்ச் மீதும் ஓப்பனிங் வீரர்கள் மீது குற்றஞ்சாட்டி இருக்கிறார். இவர் ரோஹித் சர்மாவை மறைமுகமாக தாக்கி உள்ளார். அதேபோல் சென்னை பிட்சை குறை கூறி உள்ளார். இதனால சேப்பாக்கத்தில் உள்ள வேறு பிட்சில் இந்திய அணி அடுத்த போட்டியில் ஆடலாம்.

மாற வாய்ப்பு

மாற வாய்ப்பு

அதேபோல் இந்திய அணியின் ஓப்பனிங் இணை மாற வாய்ப்புள்ளது. ரோஹித் சர்மா ஓரம்கட்டப்பட வாய்ப்புள்ளது. நதீம் போன்ற பவுலர்களும் அணியில் இருந்து வெளியேற்றப்பட அதிக வாய்ப்புள்ளது.

Story first published: Tuesday, February 9, 2021, 22:56 [IST]
Other articles published on Feb 9, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+