For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கோலியின் விசித்திர சாதனை முடிவுக்கு வந்தது…முதன்முறையாக டெஸ்ட் அணியில் மாற்றம் இல்லை #IndvsEng

Recommended Video

முதன்முறையாக டெஸ்ட் அணியில் மாற்றம் இல்லை- வீடியோ

சௌதாம்ப்டன் : அஸ்வின் இடுப்பில் ஏற்பட்ட காயத்தில் இருந்ததால் நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆடுவாரா என்ற கேள்வி இருந்தது. தற்போது கோலி, அஸ்வின் காயத்தில் இருந்து மீண்டுவிட்டார். அணியில் மாற்றம் செய்ய வேண்டிய தேவை இருக்காது என கூறி இருக்கிறார்.

இதன் மூலம் மூன்றாவது டெஸ்டில் ஆடிய அதே அணி அடுத்த போட்டியிலும் தொடரும் என மறைமுகமாக கூறி இருக்கிறார். இங்கிலாந்து அணியும் பதினோரு வீரர்கள் கொண்ட அணிப் பட்டியலை வெளியிட்டது.

Kohli for the first time not going to change test team, as ashwin recovered from injuries

இந்தியா, இங்கிலாந்து இடையேயான நான்காவது டெஸ்ட் இன்று சௌதாம்ப்டன் நகரில் தொடங்க உள்ளது. இந்த டெஸ்டில் வென்றால் இங்கிலாந்து தொடரை வெல்லும். அதை தடுக்க இந்தியா வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

எனவே, மூன்றாவது போட்டியில் வென்ற அதே அணியை நான்காவது போட்டியிலும் ஆட வைத்தால் மனதளவில் அது வீரர்களை நம்பிக்கையோடு ஆட வைக்கும். முதல் இரண்டு போட்டிகளின் தோல்விகளில் இருந்து மூன்றாவது டெஸ்டின் வெற்றி வீரர்களை மீட்டாலும், இந்தியா அடுத்த இரண்டு டெஸ்டையும் வென்றாக வேண்டும்.

இதுவரை, 38 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக இருந்த கோலி, அனைத்து போட்டிகளிலும் வீரர்களை மாற்றி வந்துள்ளார். அஸ்வினுக்கு காயம் ஏற்பட்டதால், அடுத்த டெஸ்ட் போட்டியிலும் அணியை மாற்ற வேண்டிய நிலை ஏற்படும் என்ற நிலை இருந்தது.

ஆனால், அஸ்வின் காயதில் இருந்து மீண்டு விட்டார் என்ற தகவலால், கோலி அடுத்த போட்டியில் முதன் முறையாக மாற்றமில்லாத அணியோடு களமிறங்க உள்ளார்.

Story first published: Thursday, August 30, 2018, 11:55 [IST]
Other articles published on Aug 30, 2018
English summary
Kohli for the first time not going to change test team, as ashwin recovered from injuries
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+