Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நதீம் கொடுத்த "ஓவர் பிரஷர்".. வேறு வழியின்றி.. அடுத்தடுத்து தப்பு செய்த கோலி..அதிர வைக்கும் சம்பவம்

சென்னை: இங்கிலாந்துக்கு எதிராக இன்று இந்திய கேப்டன் கோலி அடுத்தடுத்து இரண்டு முறை டிஆர்எஸ் எடுத்தது சர்ச்சையாகி உள்ளது.

இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்து வீரர்கள் அதிரடியாக ஆடி வருகிறார்கள். இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் 150 ரன்களை கடந்து அதிரடியாக ஆடி வருகிறார்.

இன்னொரு பக்கம் ஸ்டோக்ஸ் அரை சதம் அடித்து வெளுத்து வாங்கிக்கொண்டு இருக்கிறார். இங்கிலாந்து அணி 336 ரன்களை 3 விக்கெட்டிற்கு கடந்துள்ளது.

டிஆர்எஸ்

டிஆர்எஸ்

இங்கிலாந்துக்கு எதிராக இன்று இந்திய கேப்டன் கோலி அடுத்தடுத்து இரண்டு முறை டிஆர்எஸ் எடுத்தது சர்ச்சையாகி உள்ளது. இங்கிலாந்து அணியின் முக்கிய பேட்ஸ்மேன்கள் ரூட் - ஸ்டோக்ஸ் இருவரும் களத்தில் உள்ளனர். இதனால் இந்திய வீரர்கள் மீதான அழுத்தம் அதிகரித்துள்ளது.

ரூட்

ரூட்

அதிலும் ரூட் 150 ரன்களை கடந்துவிட்ட காரணத்தால் இந்திய பவுலர்கள் எப்படியாவது விக்கெட் எடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளனர். இப்படிப்பட்ட நிலையில் அஸ்வின் ஓவரில் ஸ்டோக்ஸ் விக்கெட் ஆனது போல இருந்தது. இவர் எல்பிடபிள்யூ ஆனது போல இருந்தது.

டிஆர்எஸ்

டிஆர்எஸ்

இதனால் கோலி டிஆர்எஸ் கேட்டார். ஆனால் இந்த பந்து ஸ்டோக்ஸ் பேடில் படாமல் அவரின் கிளவுஸில் பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அந்த டிஆர்எஸ் பறிபோனது. அடுத்த ஓவரிலேயே நதீம் ஓவரில் ஜோ ரூட் விக்கெட் ஆனது போல இருந்தது. இவர் எல்பிடபிள்யூ ஆனது போல இருந்தது.

மோசம்

மோசம்

ஆனால் பந்து அதிகமாக பவுன்ஸ் ஆனது தெரிந்தது. இதை நதீம் விக்கெட் என்று நினைத்து கோலியிடம் உறுதியாக குறிப்பிட்டார். விக்கெட் விக்கெட் என்று கூறி கோலிக்கு நதீம் பிரஷர் கொடுத்தார்.இதனால் கோலி வேறு வழியின்றி டிஆர்எஸ் கேட்டார்.

விக்கெட் இல்லை

விக்கெட் இல்லை

ஆனால் அந்த பந்து அதிகம் பவுன்ஸ் ஆகி, ஸ்டம்பை மோதாமல் சென்றது. இதனால் ரிவ்யூவில் விக்கெட் இல்லை என்பது தெளிவாக தெரிந்தது. கோலி அவசரப்பட்டு ரிவ்யூ கேட்ட காரணத்தால் இந்திய அணி இரண்டாவது டிஆர்எஸ் ரிவ்யூவையும் இழந்தது.

Story first published: Saturday, February 6, 2021, 13:14 [IST]
Other articles published on Feb 6, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+