ஐசிசி தரவரிசையில் நம்பர் 1 இடம்.. இதிலும் கோஹ்லி சாதனை!
Recommended Video

டெல்லி: டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்து சாதனைப் படைத்த இந்திய கேப்டன் விராட் கோஹ்லி, ஒருதினப் போட்டியிலும் முதலிடத்தைப் பிடித்து, ஒரே நேரத்தில் இரண்டிலும் நம்பர் 1 இடத்தில் இருக்கும் சாதனையைப் புரிந்துள்ளார்.
டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசையை ஐசிசி வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் விராட் கோஹ்லி முதலிடத்தைப் பிடித்தார். முதல் முறையாக டெஸ்ட் தரவரிசையில் கோஹ்லி முதலிடத்தைப் பிடித்தார்.

இதற்கு முன் 2011ல் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் இருந்தார். அதன் பின்னர் இந்திய வீரர் ஒருவர் டெஸ்ட் தர வரிசையில் முதல் இடம் பிடிப்பது இதுவே முதல் முறை.
மேலும் சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், கவுதம் கம்பிர், வீரேந்திர சேவாக், சுனில் கவாஸ்கர் மற்றும் திலீப் வெங்சர்க்கார் ஆகியோருக்குப் பிறகு, முதலிடத்தைப் பிடித்த 7வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்.
இந்த நிலையில் ஒருதினப் போட்டிக்கான பேட்டிங் தரவரிசையிலும் கோஹ்லி முதலிடத்தில் உள்ளார். இதன் மூலம் ஒரே நேரத்தில் இரண்டிலும் முதலிடத்தைப் பிடித்த இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை கோஹ்லி பெற்றுள்ளார். சச்சின் டெண்டுகல்கர் 1998 மற்றும் 2001ல் என இரண்டு முறை, ஒரே நேரத்தில் இரண்டு வகையான போட்டிகளுக்கான தரவரிசையில் பேட்டிங்கில் முதலிடத்தில் இருந்தார்.
மேலும் இந்தச் சாதனையைப் புரிந்த 9வது வீரராகிறார் கோஹ்லி. கடைசியாக 2013ல் தென்னாப்பிரிக்காவின் ஹசிம் ஆம்லா இரண்டு வகையான கிரி்க்கெட்டிலும் நம்பர் 1 இடத்தில் இருந்தார்.


Click it and Unblock the Notifications