"ஹெவி ரோலரை போடுங்க".. கோலி போட்ட உத்தரவு.. அடுத்த ஓவரை வீசிய அஸ்வின்.. ப்பா மாஸ்டர் மாஸ்டர்தான்
சென்னை: இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது இன்னிங்ஸ் தொடக்கத்தில் கோலி எடுத்த சில முடிவுகள் பெரிய அளவில் வைரலாகி உள்ளது.
சென்னையில் நடந்து வரும் இங்கிலாந்து இந்தியா இடையிலான டெஸ்ட் போட்டி மிகவும் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்டில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 578 ரன்கள் எடுத்துள்ளது.
அதன்பின் இந்திய அணி 337 ரன்கள் எடுத்த நிலையில் ஆல் அவுட் ஆகி உள்ளது. இந்திய அணி இங்கிலாந்தை விட 241 ரன்கள் பின் தங்கி உள்ளது. தற்போது இங்கிலாந்து பேட்டிங் செய்து வருகிறது.

இங்கிலாந்து
இந்த நிலையில் இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கும் முன் பிட்சில் ரோலர் வைத்து உருட்டப்படும்.இதில் பவுலிங் செய்யும் அணி எந்த ரோலரை பயன்படுத்தலாம் என்று கூற முடியும். இதையடுத்து இந்திய அணியின் கேப்டன் கோலி பிட்ச் பெரிதாக இருக்கும் ஹெவி ரோலரை வைத்து உருட்டும்படி கூறினார்.

பேட்டிங்
கோலியின் இந்த முடிவு பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. சென்னை பிட்ச் ஏற்கனவே மூன்றரை நாள் ஆட்டம் காரணமாக காய்ந்து போய், பவுலிங் செய்ய ஏற்றபடி மாறியுள்ளது. இதில் மேலும் ஹெவி ரோலர் போட்டால் பிட்ச் இன்னும் அழுத்தம் பெற்று செட்டாகும்.

சில ஓவர்கள்
இதனால் இன்னும் சில ஓவர்கள் பிட்ச் மேலும் பவுலிங்கிற்கு ஏற்றபடி மாறும். அதோடு பிட்ச் இன்னும் நன்றாக பவுன்ஸ் ஆகும். இதில் ஸ்பின் செய்தால் எளிதாக வரிசையாக விக்கெட் விழும். இதனால்தான் பிட்சில் ஹெவி ரோலர் போடும்படி கோலி உத்தரவிட்டார்.

பிட்ச் எப்படி
அவர் சொன்னபடி பிட்ச் தற்போது பவுன்ஸ் ஆகி வருகிறது. அதுபோல் ஸ்பின் செய்ய ஏற்றபடி மாறியுள்ளது. இதனால்தான் சரியாக அஸ்வினுக்கு இரண்டாவது இன்னிங்சில் கோலி முதல் ஓவர் கொடுத்தார். அதில் முதல் பந்திலேயே அஸ்வின் பர்ன்ஸ் விக்கெட்டை எடுத்தார்.

பவுலிங்
இதனால் பிட்ச் ஸ்பின் பவுலிங்கிற்கு ஏற்றபடி மாறியுள்ளது. இதில் இங்கிலாந்தை முடிந்த வரை 150 ரன்களுக்குள் சுருட்ட இந்தியா திட்டமிடும். இதன் மூலம் இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி வெற்றியை நோக்கி செல்ல திட்டமிடும்.


Click it and Unblock the Notifications