"அவர் ஏதோ வித்தியாசமாக செய்கிறார்".. இளம் வீரரின் கையையே உற்று பார்த்த கோலி.. அதிர வைக்கும் காரணம்
சென்னை: இங்கிலாந்து அணிக்கு எதிராக நடந்து வரும் முதல் டெஸ்ட் போட்டியில் கேப்டன் கோலி செய்த காரியம் ஒன்று பெரிய அளவில் வைரலாகி வருகிறது.
இந்தியா இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி தற்போது சென்னையில் நடந்து வருகிறது. இரண்டு அணிகளுக்கு இடையிலான முதல் மூன்று நாள் ஆட்டம் முடிந்துள்ளது.
மூன்று நாள் ஆட்டத்திலும் ஒரே ஒரு செஷனை தவிர மற்ற அனைத்திலும் இங்கிலாந்து அணியே ஆதிக்கம் செலுத்தியது. இதில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 578 ரன்கள் எடுத்தது.

எப்படி
இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் தனியாளாக 218 ரன்கள் எடுத்தார். இதன்பின் களமிறங்கிய இந்திய அணியில் வீரர்கள் வரிசையாக சொற்ப ரன்களில் அவுட் ஆனார்கள். இந்திய அணி 6 விக்கெட்டுக்கு 257 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது. பாலோ ஆனை தவிர்க்க இந்திய அணி 378 ரன்களுக்கும் அதிகமாக எடுக்க வேண்டும்.

போராட்டம்
இதனால் இந்திய அணி களத்தில் கடுமையாக திணறி வருகிறது. இந்திய அணிக்கு எதிராக நேற்று இங்கிலாந்தின் இளம் வீரர் டொமினிக் பெஸ் மிகவும் சிறப்பாக பந்து வீசினார். இந்திய அணியின் முக்கியமான டாப் ஆர்டர் வீரர்கள் எல்லோரையம் இவர் எளிதாக விக்கெட் எடுத்தார் .

பவுலிங்
மோனினிக் பவுலிங்கில் பண்ட் 91 ரன்களில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். புஜாரா அதேபோல் 73 ரன்களில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இன்னொரு பக்கம் கோலி 11 ரன்களுக்கு கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். ரஹானேவும் கேட்ச் கொடுத்து 1 ரன்னுக்கு அவுட் ஆனார்.

கோலி
இவரின் பவுலிங்கை பார்த்து கேப்டன் கோலியே களத்தில் கொஞ்சம் நடுங்கி போனார். என்ன இவர் இப்படி பவுலிங் செய்கிறார் என்று ஆடிப்போனார். இதனால் அவர் பந்தை எப்படி பிடிக்கிறார். எங்கிருந்து வீசுகிறார் என்பதை கோலி கூர்மையாக கவனித்தார். ரன்னர் எண்டில் நிற்கும் போது கோலி டொமினிக் பெஸ் கையையே பார்த்தார்.

எப்படி
இவர் எப்படி எளிதாக விக்கெட் எடுக்கிறார் என்பதை கவனிக்க இப்படி கோலி செய்தார். இதுபோல் பவுலர்களை கோலி கூர்ந்து கவனிப்பது கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. கோலி இவ்வளவு கவனமாக மற்ற வீரர்களை கவனிப்பது பலருக்கும் ஆச்சர்யத்தை அளித்துள்ளது.


Click it and Unblock the Notifications