மிர்புர் : இந்தியா- வங்காள தேச அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில், பேடு கட்டாமல் வீராட் கோலி விக்கெட் கீப்பராக செயல்பட்டு ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தினார்.
மிர்புரில் இந்தியா- வங்காள தேச அணிகளுக்கு இடையிலான முதல் ஒரு நாள் போட்டி நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த வங்காள தேசம் அதிரடியாக விளையாடி ரன் குவித்தது, இந்திய பந்துவீச்சாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இதனை மிஞ்சும் வகையில், துணை கேப்டன் வீராட் கோலி கீப்பராக களம் இறங்கியது மேலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
44-வது ஓவரை உமேஷ் யாதவ் வீசினார். இந்த ஓவரில் விக்கெட் கீப்பர் தேவையில்லை என்று எண்ணிய தோனி, பவுண்டரி லைனில் பீல்டிங் செய்தார்.
அப்போது தோனியின் கிளவுசை பெற்றுக் கொண்டு துணை கேப்டன் வீராட் கோலி பேடு கட்டிக்கொள்ளாமல் விக்கெட் கீப்பராக செயல்பட்டு பந்து பின்னோக்கி கடந்து செல்லாமல் மடக்கினார்.
இது கேலரியில் அமர்ந்திருந்த ரசிகர்கள் மட்டுமல்லாது, தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.