Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"அந்த நாள் நியாபகம்".. 13 வருடங்களுக்கு பிறகு.. கோலி - ஜடேஜா காம்போ மீண்டும் "கப்" அடிக்குமா?

மும்பை: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி தொடர்பான ஒரு ஸ்பெஷல் செய்தி இது. அதாவது, 13 வருடங்களுக்கு பிறகு நான்கு பேர் மீண்டும் மல்லுக்கட்டுகின்றனர்.

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ஜூன் 18ம் தேதி நியூசிலாந்து உடனான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி மோதுகிறது.

அதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 4ம் தேதி தொடங்கும், இங்கிலாந்து அணியுடனான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடுகிறது.

 இந்திய அணிக்கு சிக்கல்

இந்திய அணிக்கு சிக்கல்

இதில், வரலாற்றில் முதன் முதலாக நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில், இந்திய அணி இறுதிப் போட்டியில் விளையாடுவதால், கிட்டத்தட்ட ஒரு உலகக் கோப்பை இறுதிப் போட்டி ரேஞ்சுக்கு ரசிகர்கள் இதனை எதிர்பார்க்கின்றனர். வீரர்களே இதனை அப்படித்தான் உணர்கின்றனர். எனினும், இந்திய அணிக்கு சில பல சிக்கல்களே இப்போட்டியில் சுற்றி வருகின்றன.

 இல்லை, இல்லை

இல்லை, இல்லை

அதாவது, ஐபிஎல் தொடர் நிறுத்தப்பட்டதில் இருந்து இந்திய வீரர்கள் அனைவரும் முழு ஓய்வில் இருந்து வருகின்றனர். இப்போதும், போட்டி நடைபெறும் சவுத்தாம்ப்டன் நகரில் குவாரண்டைனில் உள்ளனர். அவ்வப்போது வீரர்கள் பயிற்சிக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். அதுவும், ஒரு குழுவாக செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. தனித்தனியாகவே செல்கின்றனர். பயிற்சிப் போட்டிகளும் இல்லை.இத்தனை இல்லைகள் இருப்பதால், இறுதிப் போட்டிக்கு நேரடியாக வந்து களமிறங்குவதே இந்திய அணிக்கான பெரிய மைனஸ் என்கின்றனர்.

 ஷர்துள் தாகூர்

ஷர்துள் தாகூர்

அதேபோல், இந்தியாவிடம் ஃபாஸ்ட் பவுலிங் ஆல் ரவுண்டர் இல்லை. ஹர்திக் பாண்ட்யா இன்னும் முழு உடற்தகுதி பெறாததால், அவர் இங்கிலாந்து தொடரில் இடம் பெறவில்லை. பாண்ட்யாவுக்கு மாற்றாக தான் ஷர்துள் தாகூர் இங்கிலாந்து அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அவர் வேகப்பந்து வீச்சாளர் என்றாலும், ஐபிஎல் போட்டிகளில் தனது பேட்டிங் திறனையும் வெளிப்படுத்தி இருக்கிறார். ஆனால், பாண்ட்யா அளவுக்கு அவரால் ஆற்றலை வெளிப்படுத்த முடியுமா என்பது கேள்விக்குறியே.

 மீண்டும் மோதல்

மீண்டும் மோதல்

சரி இது ஒருபக்கம் இருக்கட்டும். இன்னொரு சுவாரஸ்ய விஷயம் தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அதாவது, விராட் கோலி தலைமையிலான இந்திய அண்டர் 19 அணி, 2008ல் உலகக் கோப்பையை வென்றது நினைவிருக்கலாம். அதில் அரையிறுதிப் போட்டியில் இந்தியாவும் நியூசிலாந்து மோதின. அந்த போட்டியில், இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜாவும், நியூசிலாந்து அணியில் தற்போதைய கேப்டன் கேன் வில்லியம்சன் மற்றும் டிம் சவுதி ஆகியோர் இதன் பெற்றிருந்தனர். அதாவது, 13 வருடத்திற்கு முன்பு உலகக் கோப்பை அரையிறுதியில் விளையாடிய விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, கேன் வில்லியம்சன், டிம் சவுதி ஆகியோர் மீண்டும் எதிர் எதிர் அணிகளாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் மோதுகின்றனர். செமல்ல..!

Story first published: Tuesday, June 8, 2021, 21:25 [IST]
Other articles published on Jun 8, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+