Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நிரந்தரம் எல்லாம் இல்லை.. உறுதியாக சொல்லிவிட்ட பிசிசிஐ.. கோலிக்கு உதவிய டேட்டா.. ரஹானேவிற்கு செக்!

சிட்னி: இந்திய டெஸ்ட் அணியின் நிரந்தர கேப்டனாக ரஹானே பதவி ஏற்க வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.

இந்திய அணியின் கேப்டனாக தற்போது கோலி இருக்கிறார். இவரின் கேப்டன்சிக்கு கீழ் இந்திய அணி ஒருநாள், டி 20, டெஸ்ட் அணி என்று அனைத்திலும் கலக்கி வருகிறது.

சிறுசிறு தவறுகள் இருந்தாலும் இந்திய அணியின் கேப்டன்களில் மிக முக்கியமான ஒருவராக கோலி உருவெடுத்து உள்ளார். அதிலும் டெஸ்ட் அணியில் கோலியின் ஆதிக்கம் புதிய உயரத்தை தொட்டு உள்ளது.

ரஹானே

ரஹானே

இப்படி இருக்கும் போதுதான் இந்திய டெஸ்ட் மற்றும் டி 20 அணியில் புதிய கேப்டன்களை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழ தொடங்கி உள்ளது. ஒருநாள் அணியின் கேப்டனாக கோலி நீடிக்கட்டும். ஆனால் டி 20 அணிக்கு ரோஹித் சர்மா கேப்டனாக இருக்க வேண்டும்.

டெஸ்ட்

டெஸ்ட்

அதேபோல் டெஸ்ட் அணிக்கு ரஹானே கேப்டனாக இருக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழ தொடங்கி உள்ளது. ஐபிஎல் தொடரில் ரோஹித் சர்மா தொடர்ந்து வெற்றிகளை குவிப்பதும் இந்த கோரிக்கைக்கு முக்கிய காரணமாக மாறி உள்ளது.

மாற்றம்

மாற்றம்

இன்னொரு பக்கம் கோலி இல்லாமல் ரஹானே கேப்டன்சியில் ஆஸ்திரேலியாவை இந்தியா வீழ்த்தியதும் இந்த விவாதத்தை அதிகப்படுத்தி உள்ளது. இதனால் இந்திய அணியில் ஸ்ப்லிட் கேப்டன்சி குறித்த விவாதங்கள் அதிகரித்து உள்ளது. சமீபத்தில் இந்திய அணியின் தேர்வு குழு உறுப்பினர்களுக்கு நடந்த இன்டர் வியூவில் கூட இந்த ஸ்பிலிட் கேப்டன்சி குறித்து விவாதிக்கப்பட்டது.

நிரந்தரம்

நிரந்தரம்

இதனால் இந்திய அணியின் கேப்டன்சியில் மாற்றம் ஏற்படுமா என்று கேள்விகள் எழுந்தது. தான்தான் கேப்டன் என்பதில் கோலிதான் உறுதியாக உள்ளார். இந்த நிலையில்.. இந்திய அணியின் கேப்டனை மாற்றும் எண்ணம் இல்லை. இரண்டு, மூன்று கேப்டனைகளை பயன்படுத்தும் எண்ணம் பிசிசிஐக்கு இல்லை என்று கூறப்படுகிறது. கோலியை கேப்டன்சியில் இருந்து தூக்கும் எண்ணம் பிசிசிஐக்கு இல்லை என்று கூறப்படுகிறது.

கோலி முடிவு

கோலி முடிவு

கேப்டன்சியில் இருந்து விலகி, புதிய கேப்டனுக்கு வழி விடும் எண்ணம் கோலிக்கு இல்லை என்று கூறுகிறார்கள். அதேபோல் கோலியின் வெற்றி டேட்டா பெரிய அளவில் அவருக்கு சாதகமாக இருந்துள்ளது. ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, இங்கிலாந்து போன்ற நாடுகளில் கேப்டனாக கோலிதான் அதிக வெற்றிகளை குவித்துள்ளார்.

 டெஸ்ட் ஆதிக்கம்

டெஸ்ட் ஆதிக்கம்

டெஸ்ட் போட்டிகளிலும் கங்குலி , டிராவிட், தோனியை விட கேப்டன்சியில் கோலி ஆதிக்கம் செலுத்தி வருகிறார். மற்ற கேப்டன்களை விட கோலி அதிக வெற்றிகளை குவித்து உள்ளார். இதனால் கோலியை அவ்வளவு எளிதில் கேப்டன்சியில் இருந்து தூக்கிவிட மாட்டார்கள் என்று கூறப்படுகிறது .

Story first published: Thursday, December 31, 2020, 14:59 [IST]
Other articles published on Dec 31, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+