For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என்னுடைய வெற்றிப்பயணமே வாழ்க்கைப்பாடம் - உணர்ச்சி வசப்பட்ட கோஹ்லி

Recommended Video

Virat Kohli: Hard and success story of Chase Master | King Kohli

டெல்லி : சர்வதேச அளவில் பல்வேறு பிரிவுகளில் முதலிடம் பிடித்துள்ள விராத் கோஹ்லியின் 31வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டுவரும் நிலையில், உணர்ச்சிப்பூர்வமாக அவர் 15 வயது சிக்குவுக்கு எழுதியுள்ள கடிதம் பல்வேறு தளங்களில் கவனத்தை பிடித்துள்ளது.

வயது ஏற ஏற சாதனைகள் குறையும் என்ற கூற்றை உடைத்து பல்வேறு சாதனைகளை தொடர்ந்து புரிந்துவரும் விராத் கோஹ்லி தனது 31வது பிறந்தநாளான இன்று தன்னுடைய வாழ்க்கையை திரும்பிப் பார்க்கும் சந்தர்ப்பத்தை உருவாக்கிக் கொண்டுள்ளார்.

தன்னுடைய 15வது பிறந்தநாளில் தனக்கு பிடித்தமான ஷூவை தன்னுடைய தந்தை வாங்கிக் கொடுக்காதது குறித்து தனக்கே அவர் எழுதியுள்ள அந்த கடிதத்தில் காரணத்தை தெரிவித்துள்ளார். அவருடைய அனுபவ முதிர்ச்சியை இது காட்டுகிறது.

சாதனைகள்

சாதனைகள்

சிறிய வயதிலேயே சர்வதேச அளவில் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரராக விளங்குபவர் இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி. எளிதில் உணர்ச்சி வசப்படுபவர் என்ற விமர்சனத்திற்கு ஆளாகிவரும் இவர், தன்னுடைய 31வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

15 வயது சிக்கு

15 வயது சிக்கு

இந்நிலையில், சிக்கு என்று செல்லமாக அழைக்கப்படும் விராட், 15 வயது சிக்குவிற்கு (அதாவது தனக்கு) தனது டிவிட்டர் பக்கத்தில் எனக்கான குறிப்புகள் என்ற ஹேஷ்டாக்கில் எழுதியுள்ள கடிதம் அனைவரின் கவனத்தையும் பெற்று டிரெண்டிங்காகியுள்ளது.

நிறைய வாய்ப்புகள்

நிறைய வாய்ப்புகள்

தனது கடிதத்தில், முதலில் சிக்குவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ள கோஹ்லி, வாழ்க்கை அதிகப்படியான வாய்ப்புக்களை வைத்துள்ளதாகவும், அதை பெறுவதற்கு அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொள்ள தயாராக இருக்கும்படியும் தெரிவித்துள்ளார்.

உன்னில் நம்பிக்கை வை

உன்னில் நம்பிக்கை வை

சிக்கு அதிகமானவர்களால் விரும்பப்படுபவனாக இருப்பான் என்று தெரிவித்துள்ள கோஹ்லி, தன்னை வெறுப்பவர்கள் குறித்து கவலைப்படாமல், உன்னில் நம்பிக்கை வை என்று அறிவுறுத்தியுள்ளார்.

அப்பா பேச்சை ரசி

அப்பா பேச்சை ரசி

உன்னுடைய பிறந்தநாளில் அப்பா அளிக்காத ஷூ குறித்து கவலைப்படாதே. ஆனால் அவர் இன்று காலை கொடுத்த அரவணைப்பையும், உன்னுடைய உயரம் குறித்த அவரது நகையாடலையும் ரசி என்றும் விராட் தெரிவித்துள்ளார். அப்பா பலமுறை உன்னை கடிந்துக் கொண்டதற்கு காரணம், உன்னை சிறந்தவனாக்க அவர் முயன்றதே என்று விராட் தெரிவித்துள்ளார். இதன்மூலம் அவர் தன்னுடைய சிறுவயது பருவத்தை திரும்பிப் பார்த்துள்ளார்.

உயர்ந்த கனவுகள்

உயர்ந்த கனவுகள்

இறுதியாக, கனவுகளை துரத்து என்றும் உயர்ந்த கனவுகள் மாற்றத்தை உருவாக்கும் என்று உலகிற்கு உணர்த்து என்றும் சிக்குவிற்கு கூறி தனது கடிதத்தை முடித்துள்ளார் கோஹ்லி.

Story first published: Tuesday, November 5, 2019, 16:58 [IST]
Other articles published on Nov 5, 2019
English summary
Indian cricket captain Kohli writes an emotional letter through twitter to 15-year-old 'Chiku'
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+