கேட்ச்சை கோட்டை விட்ட பாகிஸ்தான் வீரர்கள்.. சிரித்து மகிழ்ந்த யுவராஜ், கோலி
Recommended Video

மும்பை : பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷோயப் மாலிக், சக வீரர் சயீத் அஜ்மல் டிராப் செய்த கேட்ச் குறித்து தன் நினைவுகளை ஒரு நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டார்.
அந்த டிராப் கேட்ச் குறித்து பின்னர் இந்திய வீரர்கள் கோலி மற்றும் யுவராஜ் சிங் தன்னிடம் கேட்டதாக கூறினார்.
அந்த டிராப் கேட்ச் சம்பவம் மிக வேடிக்கையானது. கிரிக்கெட் வரலாற்றில் நகைச்சுவையான சம்பவங்களை தொகுத்தால் நிச்சயம் இந்த கேட்ச்சும் அதில் இடம் பெறும்.

ஒரு கேட்ச் பிடிக்க 2 பேர்
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் கிறிஸ் கெயில் கொடுத்த கேட்ச்சை பிடிக்க பாகிஸ்தான் வீரர்கள் ஷோயப் மாலிக் மற்றும் சயீத் அஜ்மல் இருவரும் ஓடி வந்தனர். சயீத் அஜ்மல் பிடிப்பது போல வந்து கடைசி நேரத்தில் தரையை ஒட்டி சென்று விட்டார்.

பறிபோன கேட்ச் வாய்ப்பு
ஷோயப் மாலிக்கோ, அஜ்மல் அந்த கேட்ச்சை பிடிப்பார் என நினைத்து விட்டுவிட கடைசியில் அந்த கேட்ச் வாய்ப்பு பறிபோனது. இந்த கேட்ச் குறித்த நக்கல், நையாண்டி பேச்சுக்கள் பின்னர் வலைதளங்களில் சக்கை போடு போட்டது.

கோலி, யுவராஜ் கேட்ட விளக்கம்
சென்ற ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் ட்ராபி தொடர் இறுதிப் போட்டிக்கு பின் இந்திய வீரர்கள் கோலி, யுவராஜ் சிங் மற்றும் ஷோயப் மாலிக் இந்த டிராப் கேட்ச் குறித்து பேசி சிரித்து மகிழ்ந்துள்ளனர். கோலி அந்த கேட்ச் டிராப்பின் பின்னணியில் நடந்த சம்பவம் பற்றி கேட்க, அதற்கு மாலிக் விளக்கம் அளித்துள்ளார்.

என்ன நடந்தது?
மாலிக் கூறுகையில், "கிறிஸ் கெயில் கொடுத்த கேட்ச் அது. அது டிராப் ஆனவுடன், அஜ்மலிடம், "கேட்ச்சை பிடிக்க வந்தால் பிடிக்க வேண்டியது தானே, ஏன் கடைசி நேரத்தில் விலகினீர்கள்? என கேட்டேன். அதற்கு அவர், நீங்கள் கேட்ச்சை விட்டுவிட்டால் பிடிக்கலாமே என நான் கீழே அமர்ந்து கொண்டேன் என கூறினார்" என்றார். சாம்பியன்ஷிப் ட்ராபி இறுதியில் இந்தியா, பாகிஸ்தான் அணியிடம் 180 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.


Click it and Unblock the Notifications