இளம் வீரரின் சாதனையை சதி செய்து தடுத்த கோலி…! வேண்டும் என்றே செய்தாரா..? பரபரக்கும் குற்றச்சாட்டு
போர்ட் ஆப் ஸ்பெயின்: இளம் வீரரின் குல்தீப் யாதவின் சாதனைக்கு வாய்ப்பு அளிக்காமல், கேப்டன் கோலி தடுத்துவிட்டார் என்று குற்றச்சாட்டு வைரலாகி உள்ளது.
இந்தியா தற்போது வெஸ்ட் இண்டீசில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கும் இடையே 3வது ஒருநாள் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் தொடங்கியது.
டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. இந்த போட்டியில் இந்திய இளம் சுழல்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், 11 பேர் கொண்ட பட்டியலில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

100 விக். இந்தியர்
அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. போட்டியில் களமிறங்கி 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிவேகமாக 100 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்தியர் என்ற சாதனையை அவர் படைப்பார். ஆனால் நடந்ததே வேறு.

சாஹல் ஏன்?
யாரும் எதிர்பாராத, ஆச்சரியம் அளிக்கும் விதமாக கேப்டன் விராட் கோலி அவரை இந்த போட்டியில் தேர்வு செய்யாமல் அவருக்கு பதிலாக சாஹலை தேர்வு செய்தார். எனவே குல்தீப் யாதவ் இந்த போட்டியில் விளையாடவில்லை.

நழுவிய வாய்ப்பு
கோலியின் இந்த செயல் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. ஏனெனில் இந்த போட்டியில் குல்தீப் விளையாடினால் அவர் சாதனை படைக்க வாய்ப்பு கிடைத்திருக்கும்.

கோலி சதி
ஆனால், இது தெரிந்தும் அவருக்கு வாய்ப்பு கொடுக்காமல் சாஹலுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார் கோலி. எனவே குல்தீப் யாதவ் இந்த சாதனையை படைக்க மேலும் சில மாதங்கள் காத்திருக்க வேண்டும். அவரது சாதனையை சதி பண்ணி கோலி தடுத்துவிட்டார் கோலி என்று ரசிகர்கள் இப்போதே குமுற தொடங்கி விட்டார்.

ஷமி 100 விக்.
குறைந்த ஆட்டங்களில் 100 விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர் என்கிற பெருமையை தக்க வைத்துக்கொண்டிருப்பவர், முகமது ஷமி. 56 ஆட்டங்களில் அவர் 100 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார்.

முதலிடத்தில் ரஷித்கான்
டெத் பவுலர் பும்ராவோ ஒரு ஆட்டம் அதிகமாக விளையாடி இந்த இலக்கை எட்டி இருக்கிறார். இவர்களை மிஞ்சிய வகையில், உலகளவில் 44 ஆட்டங்களில் 100 விக்கெட்டுகள் எடுத்து முதலிடத்தில் உள்ளவர் ரஷித் கான்.

4 விக். பாக்கி
தற்போது ஷமியின் சாதனையை நெருங்கியவர் 24 வயது சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ். 53 ஒருநாள் ஆட்டங்களில் 96 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இன்னும் இரு ஆட்டங்களில் நான்கு விக்கெட்டுகள் எடுத்தால் ஷமியின் சாதனையை தாண்டிவிடுவார். ஆனால் அதை தான் கோலி தடுத்துவிட்டார்.


Click it and Unblock the Notifications