Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் பாணியில் ஐஎஸ்எல் கால்பந்து போட்டித் தொடர்: தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தா வெற்றி வாகை

கொல்கத்தா: இந்தியன் கால்பந்து லீக் போட்டியின் முதல் ஆட்டத்தில் மும்பையை வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி பெற்றுள்ளது. கால்பந்தாட்டத்தில் கொல்கத்தா முன்னோடி என்பதை முதல் வெற்றியே பறைசாற்றியுள்ளது.

ஐ.பி.எல். கிரிக்கெட் பாணியில் இந்திய கால்பந்தும் இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டித் தொடர் நேற்று தொடங்கியது. டிசம்பர் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் டெல்லி டைனமோஸ் (டெல்லி), நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி. (கவுகாத்தி), அட்லெடிகோ டீ கொல்கத்தா (கொல்கத்தா), மும்பை சிட்டி எப்.சி. (மும்பை), புனே சிட்டி (புனே), எப்.சி.கோவா (கோவா), கேரளா பிளாஸ்டர்ஸ் (கொச்சி), சென்னையின் எப்.சி (சென்னை) ஆகிய 8 அணிகள் பங்கேற்றுள்ளன.

Kolkata Beat Mumbai 3-0 in a Spectacular ISL

ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் உள்ளூர், வெளியூர் அடிப்படையில் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.

ஐ.எஸ்.எல். போட்டியின் நிறுவனத் தலைவர் நிடா அம்பானி போட்டியை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார். விழாவில் மேற்கு வங்காள மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, ஹிந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், தொழிலதிபர் முகேஷ் அம்பானி, கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங் மற்றும் சவுரவ் கங்குலி, சினிமா நட்சத்திரங்கள் அபிஷேக் பச்சன், ருத்திக் ரோஷன், ரன்பீர் கபூர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடக்க விழாவிற்கு பின் முதலாவது ஆட்டத்தில் கொல்கத்தா அட்லெடிகோ-மும்பை சிட்டி அணிகள் மோதின. விறுவிறுப்பாக தொடங்கிய ஆட்டத்தில், 27வது நிமிடத்தில் கொல்கத்தா வீரர் பிக்ரு டெபேரா (ஸ்பெயினை சேர்ந்தவர்) கோல் அடித்தார். கோல் நோக்கி முன்னேறிய அவரை மும்பை கோல் கீப்பர் சுப்ரதா பால் ஓடி வந்து தடுக்க முயற்சித்தார். ஆனால், அவரை ஏமாற்றி விட்டு ஆள் இல்லாத வலைக்குள் பந்தை பிக்ரு செலுத்தி விட்டார். இதையடுத்து பதிலடி கொடுக்க மும்பை வீரர்கள் வேகம் காட்டினர். ஆனால், அவர்களின் முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை.

உள்ளூர் ரசிகர்களின் ஆரவாரமான ஆதரவுடன் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய கொல்கத்தா அணி 70வது நிமிடத்தில் 2வது கோல் போட்டது. இதை போர்ஜா பெர்னாண்டஸ் (எத்யோப்பியா) நீண்ட தூரத்தில் இருந்து பிரமாதமாக அடித்தார். ஆட்டம் முடியும் தருவாயில் மும்பை அணியினர் இன்னொரு முறை அதிர்ச்சியை சந்திக்க வேண்டி இருந்தது. 90வது நிமிடத்தில் மாற்று வீரர் அர்னல் லிபெர்த் (ஸ்பெயின்) கோல் அடித்தார். பரபரப்பான ஆட்டத்தின் முடிவில் கொல்கத்தா அணி 3-0 என்ற கோல் கணக்கில் மும்பையை வீழ்த்தியது.

முன்னதாக நடந்த தொடக்க விழாவில், கொல்கத்தா சால்ட் லேக் ஸ்டேடியத்தில் இசை விருந்து, வாணவேடிக்கையுடன் இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா கலக்கலாக நடனமாடி குழுமியிருந்த ரசிகர்களை மகிழ்வித்தார்.

Story first published: Monday, October 13, 2014, 10:25 [IST]
Other articles published on Oct 13, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+