For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல்.. பெங்களூருக்கு ஷாக் கொடுத்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.. 82 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

By Karthikeyan

கொல்கத்தா: பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 82 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

கொல்கத்தா ஈடன் கார்டன் மையதானத்தில் நேற்று இரவு 8 மணிக்கு நடைபெற்ற ஐ.பி.எல். தொடரின் 27 ஆட்டத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பெங்களூர் கேப்டன் விராட் கோஹ்லி முதலில் பீல்டிங் தேர்வு செய்தார்.

Kolkata crush Bangalore by 82 runs, restrict RCB to lowest ever IPL total

இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு சுனில் நரேன் 17 பந்துகளில் 1 சிக்ஸர், 6 பவுண்டரி விளாசி அதிரடி காட்டி 34 ரன்கள் குவித்தார். அடுத்தடுத்து வந்த வீரர்கள் பெரிய அளவில் ரன் எடுக்காத நிலையில் 19.3 ஓவரில் 131 ரன்கள் மட்டும் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது கொல்கத்தா.

132 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடி பெங்களூர் அணி 9.4 ஓவரில் 49 ரன்களை மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் கொல்கத்தா அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

கெயில் 7, கோஹ்லி 0, மந்தீப் சிங் 1, டிவில்லியர்ஸ் 8, கேதார் ஜாதவ் 9, பின்னி 8, நெகி 2, பத்ரி 0, மில்ஸ் 2, சஹால் 0 ரன்கள் எடுத்து அவுட்டாகினர். அரவிந்த் மட்டும் 5 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தார். பெங்களூரு அணியில் யாரும் இரட்டை இலக்கத்தில் ரன்களை எடுக்காமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது.

கொல்கத்தாவின் கூல்டர் நைல் 3 ஓவரில் 21 ரன்கள் மட்டும் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். உமேஷ் யாதவ் 3 ஓவரில் 15 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளும், கிறிஸ் ஓக்ஸ் 1 விக்கெட்டும் வீழ்த்தினார்.

Story first published: Monday, April 24, 2017, 7:27 [IST]
Other articles published on Apr 24, 2017
English summary
Kolkata Knight Riders (KKR) made short work of Royal Challengers Bangalore's star-studded batting lineup to and script a remarkable 82-run win in a high-voltage Indian Premier League (IPL) game.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+