Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அடுத்த ஐபிஎல்-ல முடிஞ்சா எங்களை தொட்டுப் பாரு.. அதிரடி மாற்றம் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.. சவால்!

Recommended Video

IPL : Kolkata Team | அதிரடி மாற்றம் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- வீடியோ

கொல்கத்தா : ஐபிஎல் அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அதிரடி மாற்றம் ஒன்றை செய்து மற்ற ஐபிஎல் அணிகளுக்கு சவால் விடுத்துள்ளது.

கடந்த 2019 ஐபிஎல் தொடர் அந்த அணிக்கு மிக மோசமான ஒன்றாக அமைந்தது. அதனால், அணிக்கு புத்துணர்வு ஊட்டும் வேலைகளில் இறங்கி உள்ளது அந்த அணி.

அதன் ஒரு பகுதியாக தற்போது உலகின் முன்னணி பயிற்சியாளராக இருக்கும் ஒருவரை கொல்கத்தா அணிக்கு புதிய பயிற்சியாளராக நியமித்து அதிரடியில் இறங்கியுள்ளது.

மோசமான ஆண்டு

மோசமான ஆண்டு

2019ஆம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றிகளுடன் துவக்கினாலும், பின்னர் தொடர் தோல்விகளை சந்தித்தது. அது மட்டுமின்றி. ஐபிஎல் வரலாற்றில் எந்த அணியிலும் இல்லாத அளவு அணிக்குள் பூசல் எழுந்து, வீரர்கள் ஒருவருக்கொருவர் முட்டிக் கொண்டு நின்றனர்.

அதிரடி நீக்கம்

அதிரடி நீக்கம்

இதையடுத்து அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் புதிய அணியாக தொடரை எதிர் கொள்ள திட்டமிட்டு இருக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, முதல் வேலையாக பயிற்சியாளர் ஜாக்கஸ் காலிஸ் மற்றும் உதவி பயிற்சியாளர் சைமன் காட்டிச் ஆகிய இருவரையும் நீக்கியது.

புதிய பயிற்சியாளர்கள்

புதிய பயிற்சியாளர்கள்

அடுத்து, புதிய தலைமை பயிற்சியாளராக சமீபத்தில் உலகக்கோப்பை வென்ற இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் ட்ரெவர் பேலிஸ்-ஐ நியமித்து அதிரடி காட்டி இருக்கிறது. மேலும், பேட்டிங் பயிற்சியாளர் மற்றும் ஆலோசகராக முன்னாள் அதிரடி மன்னன் பிரென்டன் மெக்கல்லம்-ஐ நியமித்துள்ளது.

அதிரடி முடிவு

அதிரடி முடிவு

இது ஐபிஎல் அரங்கில் மிகப் பெரிய அதிரடி நகர்வாக பார்க்கப்படுகிறது. காரணம், இவர்கள் இருவருமே ஏற்கனவே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அதன் உச்சத்தில் இருந்த போது இடம் பெற்று இருந்தவர்கள். அணி நிர்வாகத்துடன் சுமூகமான உறவில் இருப்பார்கள் என்பதுடன், நிர்வாகத்திற்கும், இவர்களிடம் என்ன எதிர்பார்க்கலாம் என்பது தெளிவாக தெரியும்.

நம்பர் 1 ட்ரெவர் பேலிஸ்

நம்பர் 1 ட்ரெவர் பேலிஸ்

ட்ரெவர் பேலிஸ் 2௦12 மற்றும் 2014ஆம் ஆண்டில் கொல்கத்தா அணி ஐபிஎல் கோப்பை வென்ற போது அந்த அணியின் பயிற்சியாளராக இருந்தார். அது மட்டுமின்றி, ட்ரெவர் பேலிஸ் ஆஸ்திரேலியாவின் பிக் பாஷ் தொடரின் சிட்னி சிக்சர்ஸ் அணியை கோப்பை வெல்ல வைத்துள்ளார்.

இங்கிலாந்து நம்பர் 1

இங்கிலாந்து நம்பர் 1

கடந்த நான்கு ஆண்டுகளாக இங்கிலாந்து அணியை உலகின் நம்பர் 1 ஒருநாள் அணியாக மாற்றியதோடு உலகக்கோப்பை வெல்லவும் முக்கிய காரணமாக இருந்துள்ளார். உலகின் நம்பர் 1 பயிற்சியாளராக இருக்கும் பேலிஸ்-ஐ சரியான நேரத்தில் வளைத்துப் போட்டுள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.

மீண்டும் மெக்கல்லம்

மீண்டும் மெக்கல்லம்

அதே போல, மெக்கல்லம் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் கொல்கத்தா அணிக்காக ஆடி 158 ரன்கள் குவித்து, கொல்கத்தா அணிக்கு என ஒரு பெரும் ரசிகர் கூட்டத்தை முதல் நாள் முதல் ஏற்படுத்திக் கொடுத்தார். அதன் பின், அவர் நியூசிலாந்து அணியின் கேப்டனாக 2015ஆம் ஆண்டில் இறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்றார்.

சிறந்த அதிரடி வீரர்

சிறந்த அதிரடி வீரர்

நியூசிலாந்து மட்டுமின்றி, இன்றைய இங்கிலாந்து அணியின் அதிரடி ஆட்டத்திற்கும் மூல காரணம் மெக்கல்லம் தான். ஒருநாள் போட்டிகளிலும் டி20 போல துவக்கம் முதலே அதிரடியாக ஆடலாம் என்ற முறையை அவர் தான் அதிகம் கையாண்டு வந்தார். அத்தகைய அனுபவம் வாய்ந்த மெக்கல்லம் ஆலோசகராக நியமிக்கப்பட்டு இருப்பது கொல்கத்தா அணியை பலமான அணிகளில் ஒன்றாக மாற்றும் என்பதில் சந்தேகமில்லை.

Story first published: Wednesday, July 17, 2019, 15:36 [IST]
Other articles published on Jul 17, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+