Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

7வது ஐ.பி.எல். பஞ்சாப் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு நுழைந்தது கொல்கத்தா!!

கொல்கத்தா: 7வது ஐ.பி.எல் கிரிக்கெட் தகுதி சுற்றில் பஞ்சாப் கிங்ஸ்லெவன் அணியை வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

7-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் லீக் முடிவில் புள்ளி பட்டியலில் முதல் இரு இடங்களை பிடித்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்று நேற்று முன்தினம் இரவு கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் பலத்த மழை காரணமாக ஆட்டம் மறுநாள் ஒத்திவைக்கப்பட்டு நேற்று மாலை அதே மைதானத்தில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் ஜார்ஜ் பெய்லி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து ராபின் உத்தப்பாவும், கேப்டன் கவுதம் கம்பீரும் கொல்கத்தா அணியின் இன்னிங்சை தொடங்கினர்.

கம்பீர் அவுட்..

கம்பீர் அவுட்..

கம்பீர் 2-வது ஓவரிலேயே 1 ரன் எடுத்த நிலையிலேயே அவுட் ஆனார்.

உத்தப்பா 42 ரன்

உத்தப்பா 42 ரன்

ராபின் உத்தப்பா அதிரடி காட்டி 42 ரன்களைக் குவித்தார். உத்தப்பா தொடர்ந்து 10-வது முறையாக நேற்று 40 ரன்களை கடந்தார். அவருடன் களத்தில் இருந்த மனிஷ் பாண்டேவும் 21 ரன்களில் அவுட் ஆனார்.

மழை குறுக்கீடு..

மழை குறுக்கீடு..

கொல்கத்தா ஆடிக் கொண்டிருந்த போது 16 ஓவரின் போது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் அரைமணி நேரம் பாதிப்புக்குள்ளானது.

164 ரன்கள் இலக்கு

164 ரன்கள் இலக்கு

மழை நின்று ஆட்டம் மீண்டும் தொடங்கியது. கொல்கத்தா அணி கடைசி 4 ஓவர்களில் மட்டும் 49 ரன்களை எடுத்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது.

தாக்கு பிடிக்காத பஞ்சாப்

தாக்கு பிடிக்காத பஞ்சாப்

பின்னர் ஆடிய பஞ்சாப் அணியில் ஷேவாக் 2 ரன்களில் அவுட் ஆனார். இதைத் தொடாந்து மனன் வோராவும், விருத்திமான் சஹாவும் அணியை சரிவில் இருந்து மீட்பது போல் தெரிந்தது. ஆனால் இந்த ஜோடி விரைவிலே பிரிந்தது.

கை கொடுக்காத மேக்ஸ்வெல்

கை கொடுக்காத மேக்ஸ்வெல்

அடுத்து வந்த மேக்ஸ்வெல் 6 ரன்களிலேயே அவுட் ஆகி பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தார்.

கொல்கத்தா வெற்றி

கொல்கத்தா வெற்றி

பின்னர் ஒரே ஓவரில் பஞ்சாப் பேட்ஸ்மேன்கள் 3 சிக்சர்களை நொறுக்கிப் பார்த்தும், இலக்கை நெருங்க முடியவில்லை.

135 ரன்கள்தான்..

135 ரன்கள்தான்..

20 ஓவர்களில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியால் 8 விக்கெட்டுக்கு 135 ரன்களே எடுக்க முடிந்தது.

2வது முறையாக இறுதிப் போட்டியில் கொல்கத்தா

2வது முறையாக இறுதிப் போட்டியில் கொல்கத்தா

இதன் மூலம் முன்னாள் சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

Story first published: Thursday, May 29, 2014, 9:24 [IST]
Other articles published on May 29, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+