வி ஆர் வெயிட்டிங்.. ! 3 நாளில் சந்திப்போம்..! தல தோனியின் சென்னை அணியை வம்பிழுத்த கொல்கத்தா
Recommended Video

மும்பை: இன்னும் 3 நாட்களில் சந்திப்போம் என்று தல தோனியின் சென்னை சூப்பர் கிங்சுக்கு கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி சவால் விடுத்துள்ளது.
பெங்களூருவில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 205 ரன்களை குவித்தும் கோலி அணி தோல்வியை சந்தித்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, 5 பந்துகளை மீதம் வைத்து 206/5 என்று அபாரமாக வென்றது.
தமது வாழ்நாளில் இதுபோன்றதொரு ஆட்டத்தை கோலி எதிர்கொண்டிருக்க மாட்டார். எப்படி தோல்வி அடைந்தோம் என்று தெரியவில்லை என்கிற ரீதியில் அவர் புலம்பி தள்ளுகிறார்.

தெறிக்கவிட்ட ரசல்
அந்த போட்டியில் ஒருகட்டத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றுவிடும் என்று அனைவரும் நினைத்திருந்தனர். ஆனால்.. கொல்கத்தாவின் ரசலோ..... தமது காட்டடியால் அணியை வெற்றி பெற செய்தார்.

சிறந்த ஆட்டம்
அதில் ஆட்ட நாயகன் விருது வென்ற ரசல் 13 பந்துகளில் 1 பவுண்டரி, 7 சிக்சர்களுடன் 48 ரன்களை விளாசி தள்ளினார். அவரது ஆட்டம் ஐபிஎல் தொடரின் சிறந்த ஆட்டம் என்று புகழாரம் சூட்டப்பட்டுள்ளது.
டுவிட்டர் பதிவு
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ட்விட்டர் பக்கத்தில், ரசலின் ஆட்டத்தை முற்றிலுமான பயங்கரமான கனவு என்று பதிவிடப்பட்டிருந்தது. அதற்கு கொல்கத்த நைட் ரைடர்ஸ் அணியின் நிர்வாகம் தமது ட்விட்டர் பக்கத்தில் பதில் தெரிவித்திருக்கிறது.
3 நாள் உள்ளது
அதில் கூறியிருப்பதாவது:
சென்னை அணியின் ட்விட்டை குறிப்பிட்டு இன்னும் மூன்று நாட்களில் சந்திப்போம் ( சென்னை கொல்கத்தா வரும் செவ்வாய்க்கிழமை மோதுகின்றன என்பது முக்கியம்) என்று குறிப்பிட்டுள்ளது. அதற்கு சென்னை அணியின் பக்கத்திலும் பதில் பதிவிடப்பட்டுள்ளது. பயத்துடன் சிரிக்கும் வடிவேலுவின் படத்தை அவர்களுக்கு பதிலாக பதிவிட்டது.


Click it and Unblock the Notifications