Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இவ்வளவு வேகமாபா.. சிஎஸ்கேவின் திட்டத்தை உடைத்த கொல்கத்தா அணி.. ஸ்டார் வீரரை தட்டித்தூக்கியது!

மும்பை: சிஎஸ்கே அணி ஸ்கெட்ச் போட்டு வைத்த வீரர்களை கொல்கத்தா அணி முன்கூட்டியே ட்ரேடிங் மூலம் தட்டி தூக்கியுள்ளது.

ஐபிஎல் 2023ம் ஆண்டு தொடருக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் 23ம் தேதியன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் கொச்சியில் இந்த மினி ஏலமானது நடைபெறவிருக்கிறது.

இந்த ஏலத்திற்காக அனைத்து அணிகளும் தாங்கள் தக்கவைக்கப்போகும் வீரர்களின் பட்டியலை சமர்பிக்க வேண்டும் என பிசிசிஐ சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி அணிகள் அதற்கான பணிகளை முடித்துள்ளன.

ட்ரேடிங் வசதி

ட்ரேடிங் வசதி

தக்கவைக்கப்போகும் வீரர்களின் பட்டியலை வெளியிடுவதற்கு முன்னதாக அணிகளுக்கு ஒரு ஸ்பெஷல் வசதி கொடுக்கப்படும். அதாவது மற்ற அணிகளுடன் பேச்சுவார்த்தை செய்து வீரர்களை ட்ரேடிங் மூலம் மாற்றிக்கொள்ளலாம். அந்தவகையில் 3 அட்டகாசமான வீரர்களை கொல்கத்தா அணி முன்கூட்டியே ட்ரேடிங் செய்திருக்கிறது.

முதல் வீரர்

முதல் வீரர்

இதில் முதல் வீரர் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஷர்துல் தாக்கூர் தான். டெல்லி அணிக்கு அமான் கானை கொடுத்துவிட்டு, ஷர்துலை வாங்கியுள்ளது கொல்கத்தா அணி. சென்னை அணியில் தோனியுடன் மிகச்சிறப்பாக செயல்பட்டு வந்த ஷர்துலை, பல போராட்டத்திற்கு பிறகு ரூ.10.75 கோடிக்கு டெல்லி வாங்கியது. அதன்படி அந்த அணிக்காக கடந்தாண்டு 14 போட்டிகளில் 15 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். 120 ரன்களையும் அடித்திருந்தார்.

சிஎஸ்கேவின் திட்டம்

சிஎஸ்கேவின் திட்டம்

ஷர்துல் தாக்கூர் விடுவிக்கப்பட்டால் ஏலத்தில் குறைந்த விலையில் எடுக்கலாம் என சிஎஸ்கே அணி திட்டமிட்டிருந்ததாக தெரிகிறது. ஆனால் கொல்கத்தா அணி முந்திக்கொண்டு ட்ரேடிங்கில் தட்டித்தூக்கியிருக்கிறது. அந்த அணி இதே போல மேலும் 2 வீரர்களையும் ட்ரேடிங் மூலம் வாங்கியிருக்கிறது.

யார் அந்த 2 வீரர்கள்

யார் அந்த 2 வீரர்கள்

கடந்தாண்டு ஐபிஎல் கோப்பையை வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியில் முக்கிய பங்காற்றிய லாக்கி ஃபெர்க்யூசன் மற்றும் ரஹ்மானுல்லா குர்பாஸ் ஆகிய இரண்டு பேரையும் வாங்கியுள்ளது. கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோர் நியூசிலாந்து தொடரில் இணைந்து ஆடவுள்ளனர். டி20 உலகக்கோப்பை தொடரிலும் ரிசர்வ் வீரர்களாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, November 15, 2022, 15:54 [IST]
Other articles published on Nov 15, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+