Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எல்லாரும் சேர்ந்து முழுமையான ஆட்டத்தை கொடுக்கணும்... பாட் கமின்ஸ் எதிர்பார்ப்பு

அபுதாபி : இன்றைய ஐபிஎல்லின் 32வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் கேகேஆர் அணி மோதவுள்ளது. இந்த போட்டி அபுதாபியின் சையக் சையத் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

ஐபிஎல் பட்டியலில் முதலிடத்தில் உள்ள மும்பை இந்தியன்ஸ் அணியுடன் 4வது இடத்தில் உள்ள கேகேஆர் அணி இன்று மோதவுள்ளது.

இந்நிலையில், கேகேஆர் அணி வீரர்கள் இணைந்து முழுமையான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று அந்த அணியின் பௌலர் பாட் கமின்ஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

கேப்டனாக மார்கன் பொறுப்பு

கேப்டனாக மார்கன் பொறுப்பு

ஐபிஎல்லின் பரபரப்பான போட்டிகளுக்கு இடையில் இன்றைய 32வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி போட்டியிடவுள்ளது. அணியின் கேப்டனாக செயல்பட்டுவந்த தினேஷ் கார்த்திக், தன்னுடைய கேப்டன் பொறுப்பை உலக கோப்பை வெற்றி கேப்டன் இயான் மார்கனிடம் தந்துள்ள நிலையில் இன்றைய போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

4வது இடத்தில் கேகேஆர்

4வது இடத்தில் கேகேஆர்

இந்த சீசனில் கேகேஆர் அணி ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடி வருகிறது. இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 4ல் அந்த அணி வெற்றி பெற்றுள்ளது. 8 புள்ளிகளுடன் ஐபிஎல் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. இந்நிலையில், அந்த அணி இன்னும் தன்னுடைய முழுமையான சிறப்பான ஆட்டத்தை ஆடவில்லை என்று அணியின் பௌலர் பாட் கமின்ஸ் தெரிவித்துள்ளார்.

முதலிடத்தை பிடிக்க முடியும்

முதலிடத்தை பிடிக்க முடியும்

கடந்த சிஎஸ்கே மற்றும் பஞ்சாப் அணிகளுக்கிடையிலான போட்டிகளில் வெற்றி பெற்றது சிறப்பானது என்றும் கூறியுள்ள பாட் கமின்ஸ், இதன்மூலம் எந்த நிலையில் இருந்தாலும் வெற்றி பெறமுடியும் என்ற நம்பிக்கை வந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய நிலையை தொடர்ந்து அணி பராமரிக்க வேண்டும் என்றும் இதையடுத்து முதலிடத்தை பிடிக்க முடியும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

தவறுகளை திருத்தி கொள்ள வேண்டும்

தவறுகளை திருத்தி கொள்ள வேண்டும்

கடந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக தோல்வியுற்றதை சுட்டிக் காட்டியுள்ள கமின்ஸ், இன்றைய ஆட்டத்தில் அந்த தவறுகளை தவிர்த்து சிறப்பான பௌலிங்கை அளிக்க முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தொடர்ந்து பவர்பிளேவில் ஓவர்களை போட்டுவரும் கமின்ஸ், எந்த நிலையில் பௌலிங் போட சொன்னாலும் தான் மகிழ்ச்சியுடன் செய்வேன் என்றும் கூறியுள்ளார்.

Story first published: Friday, October 16, 2020, 15:21 [IST]
Other articles published on Oct 16, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+