For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

CSK Vs KKR: ம்ஹூம்.. இப்படியா ஆடுவது...? தோனி அணியிடம் 108 ரன்கள் மட்டுமே எடுத்த கொல்கத்தா

Recommended Video

சென்னையின் பந்துவீச்சில் சிக்கிய கொல்கத்தா

சென்னை: சேப்பாக்கத்தில் சென்னைக்கு எதிரான போட்டியில் களம் இறங்கிய கொல்கத்தா அணி, 20 ஓவர்களின் முடிவில் 108 ரன்களே எடுத்தது.

ஐபிஎல் தொடரில் சேப்பாக்கத்தில் சிஎஸ்கே மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இரு அணிகளும் கடைசியாக நடைபெற்ற போட்டியில் அபாரமாக ஆடி வெற்றி பெற்றன.

இரு அணிகளுமே தலா 4 வெற்றி, 1 தோல்வியுடன் சிம்மசொப்பனமாக திகழ்கின்றன. இந்நிலையில் டாஸ் வென்ற சென்னை அணி கொல்கத்தா அணிக்கு எதிராக முதலில் பந்து வீச தீர்மானித்தது. இரு அணிகளிலும் கடந்த போட்டியில் விளையாடிய வீரர்களே விளையாடுகின்றனர். எவ்வித மாற்றமும் இல்லை.

லின் வெளியேறினார்

லின் வெளியேறினார்

இதையடுத்து, கொல்கத்தா அணி தொடக்க வீரர்களாக லின்னும், சுனில் நரைனும் வந்தனர். சாஹர் வீசிய முதல் ஓவரின் கடைசி பந்தில் லின் டக் அவுட்டாகினார். 2வது ஓவரை ஹர்பஜன் வீசினார். அந்த ஓவரில் சுனில் நரைன் ஆட்டமிழந்தார். 3வது ஓவரை ராயுடு அபாரமாக ஒரு கேட்ச் பிடிக்க ராணா பெவிலியன் திரும்பினார்.

அடுத்தடுத்து ஆட்டமிழப்பு

அடுத்தடுத்து ஆட்டமிழப்பு

ஒரு கணம்... என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. பேடு கட்டக் கூட நேரமில்லை என்பது போல விக்கெட்டுகள் வந்து விழுந்தன. 4வது ஓவரில் உத்தப்பா 11 ரன்களுடன் அவுட்டாகி டாட்டா சொன்னார். 5 ஓவர்கள் வீசி முடிப்பதற்குள் கொல்கத்தாவின் 4 முக்கிய விக்கெட்டுகள் போயின.

தினேஷ் கார்த்திக் அவுட்

தினேஷ் கார்த்திக் அவுட்

5வது விக்கெட்டுக்கு தினேஷ் கார்த்திக்கும், கில்லும் கை கோர்த்தனர். முக்கிய தருணங்களில் தினேஷ் கார்த்திக் பொறுப்புடன் ஆடுவார் என்று அனைவரும் எதிர் பார்த்தனர். ஆனால்.. நிலைமையோ வேற மாதிரி இருந்தது. ஸ்கோர் 44 ஆக இருந்த போது அவரும் வெளியேறினார்.

தடுமாறிய கொல்கத்தா

தடுமாறிய கொல்கத்தா

என்ன பண்ணுவது என்றே தெரியாமல் கொல்கத்தா அணியினர் தடுமாறினர். ரன்களை குவிக்கவும் முடியவில்லை. விக்கெட்டுகளை காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை.

கேட்ச் பிடிக்கவில்லை

கேட்ச் பிடிக்கவில்லை

13வது ஓவரில் சென்னை அணிக்கு ரசலை அவுட்டாக்க ஒரு அருமையான வாய்ப்பு கிடைத்தது. தாஹிர் வீசிய அந்த பந்தை ரசல் தூக்கி அடிக்க... மேலே பறந்தது. அதை பிடிக்க கைகளை உயர்த்திய ஹர்பஜன் சிங்... கோட்டை விட்டார்.

வீழ்ந்தார் சாவ்லா

வீழ்ந்தார் சாவ்லா

மைதானமே ஒரு விநாடி மயான அமைதியில் காணப்பட்டது. தான் அவசரப்பட்டு அடித்துவிட்டோம் என்று ரசலும் பீதியாகி பார்க்க.. மீண்டும் அவர் ஆடத் தொடங்கினார். 16வது ஓவரில் பியூஷ் சாவ்லா.. தோனியின் அதிவேக ஸ்டெம்பிங்கில் வீழ்ந்தார்.

20 ஓவர்களில் 108 ரன்கள்

20 ஓவர்களில் 108 ரன்கள்

இறுதி கட்டங்களில் ரன்களுக்கு பதிலாக விக்கெட்டுகள் தான் வேகமாக வந்து விழுந்தன. ரன் குவிக்க போராடிய ரசல் அணியை தூக்கி நிறுத்த போராடினார். அதிகபட்சமாக அவர் 50 ரன்கள் அடித்து அணியின் ஸ்கோர் 100 ரன்களை கடக்க உதவினார். 20 ஓவர்களின் முடிவில் கொல்கத்தா அணி 108 ரன்களை எடுத்தது.

Story first published: Tuesday, April 9, 2019, 22:03 [IST]
Other articles published on Apr 9, 2019
English summary
Kolkata knight riders 108 scored runs against Chennai super kings.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+