KKR vs DC : டெல்லி பந்தை வெளுத்த கில்லும்…காட்டடி மன்னன் ரசலும்.. 179 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம்
கொல்கத்தா: டெல்லிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி 7 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் குவித்துள்ளது.
ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீசியது.
இதையடுத்து, தொடக்க வீரர்களாக அறிமுக வீரர் டென்லியும், கில்லும் களம் கண்டனர். பெரும் எதிர்பார்ப்புடன் தொடங்கிய இந்த போட்டியில் முதல் ஓவரை இஷாந்த் சர்மா வீசினார்.

நிதான ஆட்டம்
கில்லும், உத்தப்பாவும் நிதானமாக ஆட தொடங்கினர். பொறுமையாக ரன்களை சேர்த்த இருவரும் அவ்வப்பொழுது பந்துகளை பவுண்டரிகளுக்கு விரட்டினர். ஒரு கட்டத்தில் கில், பந்துகளை சிக்சர்களுக்கும் விரட்டினார்.

நிதான ஆட்டம்
கில்லும், உத்தப்பாவும் நிதானமாக ஆட தொடங்கினர். பொறுமையாக ரன்களை சேர்த்த இருவரும் அவ்வப்பொழுது பந்துகளை பவுண்டரிகளுக்கு விரட்டினர். ஒரு கட்டத்தில் கில், பந்துகளை சிக்சர்களுக்கும் விரட்டினார்.

ராணா, உத்தப்பா அவுட்
ஸ்கோர் 63 ரன்களை எட்டிய போது உத்தப்பா 28 ரன்களில் வெளியேறினார். அதன் பிறகு ராணா வந்தார். அவரும் 11 ரன்கள் என்ற திருப்தியுடன் மோரிஸ் பந்தில் போல்டானார். 13 ஓவர்களில் 93 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

ரசல் அதிரடி
அதன் பின்னர் களத்துக்கு வந்தார் காட்டடி மன்னன் ரசல். வழக்கம் போல அதிரடியை காட்ட தொடங்கினார். ஆனால் மறு முனையில் அரைசதம் கடந்த கில், 65 ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் தினேஷ் கார்த்திக் 2 ரன்களே போதும் என்று எண்ணியபடியே வெளியேறினார்.

ரசல் 45 ரன்கள்
அதை தொடர்ந்து கிடைத்த பந்துகளை வெளுக்க தொடங்கினார் ரசல். 21 பந்துகளை எதிர் கொண்ட அவர் 45 ரன்கள் குவித்தார். அவரின் அதிரடியில் கொல்கத்தா ரன்ரேட்டும் உயர்ந்தது.

கொல்கத்தா 178 ரன்கள்
19வது ஓவரில் ஸ்கோர் 161 ரன்களாக இருக்கும் போது ரசல் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் வந்த பிராத்வொய்ட் 6 ரன்கள் அடித்தார். 20 ஓவர்கள் முடிவில்.. கொல்கத்தா 178 ரன்கள் என்ற வலுவான ஸ்கோரை எட்டியது.

வெற்றி யாருக்கு?
நடப்பு தொடரில், டெல்லி அணி 6 போட்டிகளில் விளையாடி 3ல் வெற்றி கண்டு, புள்ளி பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. கொல்கத்தா அணி 6 போட்டிகளில் விளையாடி 4இல் வெற்றி பெற்றுள்ளனர். புள்ளி பட்டியலிலும் கொல்கத்தா அணி 2ம் இடத்தில் உள்ளது.


Click it and Unblock the Notifications