Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ராணா, உத்தப்பா சூப்பர்.. மரண காட்டு காட்டிய ரசல்... 218 ரன்களை குவித்த கொல்கத்தா

கொல்கத்தா:பஞ்சாப் அணியின் மோசமான பந்துவீச்சால் முதலில் ஆடிய கொல்கத்தா அணி 219 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

கொல்கத்தாவில் இன்றைய ஐபிஎல் லீக் தொடரின் ஆறாவது லீக் போட்டியில், மன்கட் சர்ச்சையில் சிக்கியிருக்கும் பஞ்சாப் அணி, கொல்கத்தா அணியை எதிர்கொள்கிறது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் முதலில், 'பீல்டிங்' தேர்வு செய்தார்.

அதன்படி தொடக்க வீரர்களாக லின்னும், நரையனும் களத்துக்கு வந்தனர். இருவரும் அபாரமான தொடக்கத்தை தந்தனர். கிடைத்த பந்துகளை இருவரும் அவ்வப்பொழுது பவுண்டரிகளுக்கும், சிக்சர்களுக்கும் அனுப்பினர்.

உயர்ந்த ரன்ரேட்

உயர்ந்த ரன்ரேட்

வருண் சக்கரவர்த்தியின் பந்துகள் தான் அதிகளவு பவுண்டரிகளாகவும், சிக்சர்களாகவும் மாறியது. இருவரின் ரன்களில் அணியின் தொடக்க நிலை ரன் விகிதமும் எகிறியது.

ஆட்டமிழந்த நரைய்ன்

ஆட்டமிழந்த நரைய்ன்

அணியின் ஸ்கோர் 34 ரன்களாக இருந்தபோது 10 ரன்கள் எடுத்திருந்த லின் சமி பந்தில், மில்லரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அணியின் ஸ்கோர் மேலும் 2 ரன்களாக உயர்ந்த போது நன்றாக ஆடிக்கொண்டிருந்த சுனில் நரையன் 24 ரன்களில் ஆட்டமிழந்தார்.

சிக்சர்கள், பவுண்டரிகள்

சிக்சர்கள், பவுண்டரிகள்

அடுத்தடுத்து தொடக்க வீரர்கள் வெளியேறிய நிலையில் உத்தப்பாவும், ராணாவும் பஞ்சாப் பந்துவீச்சை துவம்சம் செய்துவிட்டனர். இருவரும் பந்துகளை சிக்சர்களுக்கு அடித்துவிட்டனர்.

ராணாவின் அதிரடி

ராணாவின் அதிரடி

குறிப்பாக வருண் சக்கரவர்த்தி, கேப்டன் அஸ்வின் பந்துவீச்சை வெளுத்தனர். பல முறை ராணா ஒரே ஓவர்களில் 2 முறை சிக்சர்கள் அடித்து ரன்ரேட்டை உயர்த்தினார். ரன்ரேட் உயர்வால் கொல்கத்தா அணியும், ரசிகர்கள் ஆனந்த கூத்தாடினர்.

வெறுத்துபோன பவுலர்கள்

வெறுத்துபோன பவுலர்கள்

சிறப்பாக பஞ்சாபை வெளுத்து மாஸ் காட்டிய ராணாவை கன்டரோல் பண்ண முடியாமல் பஞ்சாப் அணியினர் மண்டை காய்ந்தனர். அதிரடி ராணா அரை சதம் அடித்து அசத்தினார். ஒரு கட்டத்தில் பஞ்சாப் பவுலர்கள் மனதே வெறுத்து விட்டனர்.

அவுட்டான ராணா

அவுட்டான ராணா

சூப்பராக ஆடிக்கொண்டிருந்த ராணா 63 ரன்களில்( 2 பவுண்டரிகள், 7 சிக்சர்கள்) எடுத்து வருண் பந்தில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் வந்த காட்டடி ரசல், ஏற்கனவே புல் பார்மில் இருந்த உத்தப்பாவுடன் கலக்கினார்.

காட்டடி ரசல்

காட்டடி ரசல்

அருமையாக ஆடிக்கொண்டிருந்த உத்தப்பா அரைசதம் கடந்தார். காட்டடி ரசலோ பந்துகளை பவுண்டரிகளுக்கும், சிக்சர்களுக்கும் பல முறை அனுப்பி வைத்தார். பஞ்சாப் பந்துவீச்சாளர்களோ தலையில் துண்டு போடாத குறைதான். பவுலர்களை இருவரும் மெர்சலாக்கி விட்டனர். இறுதி கட்ட ஓவர்களில் பந்துகள் பெரும்பாலும் சிக்சர் எல்லையிலே கிடந்தன.

218 ரன்களை குவித்தது

218 ரன்களை குவித்தது

4வது விக்கெட்டுக்கு இருவரும் அடித்த ரன்களால் 19வது ஓவரில் கொல்கத்தா அணி 200 ரன்களை எட்டியது. 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி ரன்களை குவித்தது. மரண காட்டு காட்டிய ரசல் 20வது ஓவரில் டை பந்தில் அகர்வாலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். முடிவில் கொல்கத்தா அணி 4 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்களை குவித்தது.

Story first published: Wednesday, March 27, 2019, 21:58 [IST]
Other articles published on Mar 27, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+