For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

CSK Vs KKR: தோனின்னா சும்மாவா..!! இதுதான் மேட்ச்.. 1,2,3,4.. ஐந்து ஓவர்களுக்குள் 4 விக்கெட்

Recommended Video

கொல்கத்தாவை வீழ்த்தி மீண்டும் முதலிடம் பிடித்தது சென்னை

சென்னை: சேப்பாக்கத்தில் சென்னைக்கு எதிரான போட்டியில் களம் இறங்கிய கொல்கத்தா அணி முதல் ஓவர்களிலும் தலா 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

ஐபிஎல் தொடரில் சேப்பாக்கத்தில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் சிஎஸ்கே மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த இரு அணிகளும் கடைசியாக நடைபெற்ற போட்டியில் அபாரமாக ஆடி வெற்றி பெற்றன.

1
45901

இரு அணிகளுமே தலா 4 வெற்றி, 1 தோல்வியுடன் சிறப்பான மற்ற அணிகளுக்கு சிம்மசொப்பனமாக திகழ்கின்றன. இந்நிலையில் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கொல்கத்தா அணிக்கு எதிராக முதலில் பந்து வீச தீர்மானித்துள்ளது. இரு அணிகளிலும் கடந்த போட்டியில் விளையாடிய வீரர்களே விளையாடுகின்றனர். எவ்வித மாற்றமும் இல்லை.

1
45901
லின் வெளியேறினார்

லின் வெளியேறினார்

இதையடுத்து, கொல்கத்தா அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்களாக லின்னும், சுனில் நரைனும் வந்தனர். முதல் ஓவரை சாஹர் வீசினார். அந்த ஓவரின் கடைசி பந்தில் லின் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

2வது ஓவரில் அவுட்

2வது ஓவரில் அவுட்

அதன் பிறகு 2வது ஓவரை ஹர்பஜன் வீசினார். யாருமே எதிர்பார்க்கவில்லை.. அந்த ஓவரில் சுனில் நரைன் ஆட்டமிழந்தார். 3வது ஓவரை ராயுடு அபாரமாக ஒரு கேட்ச் பிடிக்க ராணா பெவிலியன் திரும்பினார்.

அடுத்தடுத்து ஆட்டமிழப்பு

அடுத்தடுத்து ஆட்டமிழப்பு

ஒரு கணம்... என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. பேடு கட்டக் கூட நேரமில்லை என்பது போல விக்கெட்டுகள் வந்து விழுந்தன. 4வது ஓவரில் உத்தப்பா 11 ரன்களுடன் அவுட்டாகி டாட்டா சொன்னார்.

4 விக்கெட்டுகள்

4 விக்கெட்டுகள்

மொத்தம் 5ஓவர்கள் வீசி முடிப்பதற்குள் கொல்கத்தா அணியில் முதல் 4 முக்கிய விக்கெட்டுகள் போயின. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முக்கிய வீரர்கள் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர்.

Story first published: Tuesday, April 9, 2019, 20:49 [IST]
Other articles published on Apr 9, 2019
English summary
Kolkata knight riders struggled to score and lose early wickets against csk.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X