For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

RCB vs KKR: சர்வ ஜாக்கிரதையாக களம் இறங்கிய கோலி படை... நிதானமான ஆட்டம்... பார்த்தீவ் அவுட்

கொல்கத்தா: வென்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தை நிதானமாக தொடங்கியது. தொடக்க வீரர் பார்த்தீவ் 25 ரன்களில் வெளியேறினார்.

1
45773

ஐபிஎல் தொடரில் 17வது போட்டியாக பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகள் மோதும் போட்டி பெங்களுரு சின்னசாமி மைதானத்தில் தொடங்கியது. கொல்கத்தா அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

பெங்களூரு அணி தொடர்ந்து 4 தோல்விகளை சந்தித்து தொடரில் நீடிக்க வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நிலையில் உள்ளது. கோலி மற்றும் டி வில்லியர்ஸ் இந்த போட்டியில் சிறப்பாக ஆட வேண்டிய நிலையில் தள்ளப்பட்டு உள்ளதால் ஆட்டம் சூடுபிடிக்கும்.

வென்றே ஆக வேண்டும்

வென்றே ஆக வேண்டும்

அதேபோல, டெல்லி அணியுடன் சூப்பர் ஓவர் வரை சென்று தோல்வியை தழுவியது. எனவே புள்ளிப்பட்டியலில் முன்னேற கொல்கத்தா அணியும் வென்றே ஆக வேண்டும் என்ற சூழலில் உள்ளது. அணிக்கு ராணா, ரஸ்ஸல், குலதீப் ஆகியோர் சிறப்பாக செயல்படுகின்றனர்.

வீரர்கள் விவரம்

வீரர்கள் விவரம்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விவரம்: கிர்ன்ஸ் லின், சுனில் நாரைன், ராபின் உத்தப்பா, நிதீஷ் ராணா, தினேஷ் கார்த்திக், சப்மன் கில், ஆண்ட்ரே ரஸல், பியுஷ் சாவ்லா, குல்தீப் யாதவ், லாக்ஸி பெர்குசன், பிரசித் கிருஷ்ணா.

யார்? யார்?

யார்? யார்?

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் வீரர்கள் விவரம்: விராத் கோலி, பார்த்திவ் படேல் (எல்), ஏபி டி வில்லியர்ஸ், மார்கஸ் ஸ்டோனெனிஸ், மோயீன் அலி, அக்ஷ்திப் நாத், பவன் நேகி, டிம் சௌதி, நவடிப் சைனி, யூசுந்தேரா சஹால், முகமது சிராஜ்.

கோலி, பார்த்தீவ்

கோலி, பார்த்தீவ்

இதையடுத்து, கோலி அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக கோலியும், பார்த்தீவ் படேலும் களம் இறங்கினர். இருவரும் சர்வ நிதானமாக தமது ஆட்டத்தை தொடர்ந்தனர்.

முதல் ஓவரில் 13 ரன்கள்

முதல் ஓவரில் 13 ரன்கள்

ஒரு முடிவு எடுத்தவாறு, இருவரும் கொல்கத்தா பந்துவீச்சை எதிர்கொண்டனர். முதல் ஓவரில் பெங்களூரு அணி 13 ரன்கள் எடுத்தது. அதற்கடுத்த ஓவர்களில் சீரான வேகத்தில் ரன்கள் வந்து விழுந்தன.

31 பந்துகளில் 50 ரன்கள்

31 பந்துகளில் 50 ரன்கள்

விக்கெட்டுகளை இழக்காமல் அதே நேரத்தில் ரன்களை சேர்க்க வேண்டும் என்ற நெருக்கடியில் கோலியும், பார்த்தீவ்வும் ஆடினர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் சேர்ந்து 31 பந்துகளில் 50 ரன்களை எடுத்து வலுவான அடித்தளத்தை அமைத்து கொடுத்தனர்.

25 ரன்களில் அவுட்

25 ரன்களில் அவுட்

4வது ஓவரில் அந்த அணிக்கு 13 ரன்கள் கிடைத்தன. சர்வஜாக்கிரதையாக இருவரும் ஆட்டத்தை தொடர்ந்ததால் அணியின் ஸ்கோர் ரன்ரேட்டும் 9 என்ற அளவிலேயே இருந்தது. 8வது ஓவரில் ராணாவின் பந்தில் பார்த்தீவ் படேல் ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 64 ரன்கள் குவித்தது.

Story first published: Friday, April 5, 2019, 20:53 [IST]
Other articles published on Apr 5, 2019
English summary
Kolkata Knight Riders won the toss and elected to field against royal challengers Bangalore.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X