சன் ரைசர்சுக்கு எதிரான ஆட்டம்… 182 ரன்களை ஆமை வேகத்தில் துரத்தும் கொல்கத்தா.. தொடக்கமே மோசம்
கொல்கத்தா: சன் ரைசர்சுக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா ஓப்னிங்கே சொதப்பலாகி போனது.
12வது ஐபிஎல் சீசனின் 2-ஆவது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோவ் ஆகியோர் களமிறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு நல்ல தொடக்கத்தை அளித்தனர். ஓராண்டு தடைக்கு பிறகு அணிக்கு திரும்பிய டேவிட் வார்னர் அதிரடியாக ரன் குவித்து விளையாடினார்.

தொடக்கம் அருமை
மறுமுனையில் பேர்ஸ்டோவ் நல்ல ஒத்துழைப்பு அளித்து வந்ததால், ரன் ரேட் சீராக உயர்ந்து வந்தது. ஆனால், அவர் 35 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து சாவ்லா ஓவரில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 118 ரன்கள் எடுத்தது.

85 ரன்களில் அவுட்
வார்னர் 53 பந்துகளில் 85 ரன்கள் குவித்த வார்னர் 16வது ஓவரில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய யூசுப் பதான் 1 ரன்னுக்கு ஆட்டமிழந்தார்.

182 ரன்கள் இலக்கு
இறுதியில் விஜய் சங்கரும், மணீஷ் பாண்டேவும் சற்று அதிரடி காட்ட 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் எடுத்தது. விஜய் சங்கர் 24 பந்துகளில் 40 ரன்களுடனும், மணீஷ் பாண்டே 5 பந்துகளில் 8 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

எதிர்பார்த்த ரசிகர்கள்
அதன்பின்னர் 182 ரன்களை நோக்கி கொல்கத்தா களமிறங்கியது. தொடக்க வீரர்களாக கிறிஸ் லின்னும், ராணாவும் வந்தனர். அருமையான தொடக்கம் தருவர் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

வந்தார் உத்தப்பா
ஆனால், ஷாகிப் அல் ஹசன் பந்தில் ரஷித் கானிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் லின். 2வது விக்கெட்டுக்கு ராணாவுடன் கை கோர்த்தார் உத்தப்பா. இருவரும் நிதானமாக ரன்களை சேர்த்தனர்.

35 ரன்கள் அவுட்
கிடைத்த பந்துகளை அவ்வப்பொழுது, பந்துகளை பந்துகளை, பவுண்டரிகளாக அடித்தனர். அணியின் ஸ்கோர் 87 ரன்களை எட்டிய போது உத்தப்பா,கவுல் பந்தில் வீழ்ந்தார். அதன்பிறகு வந்த கேப்டன் தினேஷ் கார்த்திக், ராணாவுடன் கைகோர்த்தார்.


Click it and Unblock the Notifications