டக்வொர்த்தி லூயிஸ் முறையில் 10 ரன்களில் சென்னையை வீழ்த்தியது கொல்கத்தா
கொல்கத்தா: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டக்வொர்த்தி லூயிஸ் முறையில் 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.

தொடர்ந்து நான்கு போட்டிகளாக வென்று வந்த சென்னைக்கு நேற்று கொல்கத்தா முற்றுப்புள்ளி வைத்து விட்டது. கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடந்த போட்டியில் தனது சிறப்பான பந்து வீச்சால் 4 விக்கெட் இழப்புக்கு 114 ரன்களுடன் சென்னையை நிறுத்தியது கொல்கத்தா.
பத்ரிநாத் மட்டுமே சற்று சிறப்பாக ஆடினார். பின்னர் ஆடத் தொடங்கிய கொல்கத்தாவுக்கு சென்னையின் அஸ்வின் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்களை வீழ்த்தி தடுமாற்றத்தைக் கொடுத்தார்.
இந்த நிலையில் மழை வந்து ஆட்டத்தைக் கெடுத்தது. பத்து ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 61 ரன்களை அப்போது எடுத்திருந்தது கொல்கத்தா. இதையடுத்து டக்வொர்த்தி லூயிஸ் முறைப்படி கொல்கத்தா அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
கல்லிஸ் ஆட்டமிழக்காமல் 21 ரன்களும், மனோஜ் திவாரி 15 ரன்களும் எடுத்து ஆட்டக்களத்தில் இருந்தனர்.
இந்த வெற்றியின் மூலம் 2வது இடத்தை கொல்கத்தா தக்க வைத்துக் கொண்டுள்ளது. சென்னை தொடர்ந்து 3வது இடத்தில் நீடிக்கிறது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:46 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications