Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

புவனேஸ்வர் குமார் புயல் வேக பந்து வீச்சுக்கு பணிந்த நியூசிலாந்து.. முதல் இன்னிங்சில் திணறல்

கொல்கத்தா: இந்தியா-நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி ரன் குவிக்க திணறி வருகிறது. இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர்குமார் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

கான்பூரில் நடைபெற்ற, சிறப்புமிக்க, இந்தியாவின் 500வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்தை இந்தியா வீழ்த்தியது. 2வது டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் தொடங்கியுள்ள நிலையில், முதலில் பேட் செய்த இந்திய அணி 316 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

Kolkata Test: Bhuvneshwar claims five-for as New Zealand reduced to 128/7

இதையடுத்து நியூசிலாந்து 2வது இன்னிங்சை தொடங்கியது. நடுவே மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பல நிமிட நேரம் தடைபட்டது. இன்றைய ஆட்ட நேர இறுதியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்களை எடுத்து திணறிக்கொண்டுள்ளது. இதில் 5 விக்கெட்டுகளை புவனேஸ்வர்குமார் வீழ்த்தினார்.

தற்போதைய நிலையில், முதல் இன்னிங்சில், இந்தியாவைவிட 188 ரன்கள் பின்தங்கியுள்ளது நியூசிலாந்து. 10 ஓவர்கள் வீசிய அவர் 33 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். புவனேஸ்வர் குமாரின் பந்துகள் லாவகமாக இருபுறமும் ஸ்விங் ஆனது.

Story first published: Saturday, October 1, 2016, 17:49 [IST]
Other articles published on Oct 1, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+