சூறாவளியான கொல்கத்தா... சீசனில் அதிகபட்ச ஸ்கோர்... ஐபிஎல்லில் புதிய சாதனை!
Recommended Video

இந்தூர்: ஐபிஎல் 11வது சீசனில் அதிகபட்ச ஸ்கோரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பதிவு செய்துள்ளது. பஞ்சாபுக்கு எதிராக அந்த அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 245 ரன்கள் சேர்த்துள்ளது.
ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் நடந்து வருகிறது. இந்த சீசனில் இதுவரை நடந்துள்ள 43 ஆட்டங்களில், 9 முறை, 200க்கும் மேற்பட்ட ஸ்கோர் எடுக்கப்பட்டுள்ளது.

சீசனின் 44வது ஆட்டத்தில் கொல்கத்தாவும், பஞ்சாபும் மோதுகின்றன. இதில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 245 ரன்கள் எடுத்துள்ளது.
இது இந்த சீசனில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராகும். மேலும், சீசனில் 10வது முறையாக எடுக்கப்பட்ட 200க்கும் மேற்பட்ட ஸ்கோராகும்.
சீசனின் 26வது ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ்,. 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் எடுத்ததே இதுவரை அதிகபட்ச ஸ்கோராக இருந்தது.
ஐபிஎல் வரலாற்றில் அடிக்கப்பட்டுள்ள அதிகபட்ச ஸ்கோர்களில் இது 4வது இடத்தில் உள்ளது. 2013ல் பெங்களூர் 263 ரன்களும், 2016ல் பெங்களூர் 248 ரன்களும், 201ல் சென்னை சூப்பர் கிங்ஸ் 246 ரன்களும் அடித்துள்ளன.


Click it and Unblock the Notifications