இந்திய அணி வெல்ல காளஹஸ்தியில் ஸ்ரீகாந்த் சிறப்பு பூஜை!!

இந்திய அணியின் தேர்வுக் குழுத் தலைவர் ஸ்ரீகாந்த் இதற்காக காளஹஸ்தி கோயிலில் சிறப்பு பூஜை மற்றும் ராகு - கேது சர்ப்ப நிவாரண பூஜைகளைச் செய்தார்.
இந்திய கிரிக்கெட் அணி தேர்வுக் குழு தலைவர் ஸ்ரீகாந்த் காளகஸ்தி கோவிலுக்கு சென்றார். அவரை கோவில் அர்ச்சகர்கள்-நிர்வாகிகள் வரவேற்று அழைத்துச் சென்றனர். அவர் அங்கு வந்திருப்பதை அறிந்ததும் ஏராளமான கிரிக்கெட் ரசிகர்கள் திரண்டனர்.
அவரிடம் போட்டி போட்டு கை குலுக்க முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
பின்னர் ஸ்ரீகாந்த் நிருபர்களிடம் கூறியதாவது:
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவதற்காக காளகஸ்தி வாயு லிங்கேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை நடத்தினேன். சிறப்பு அபிேகம், சர்ப்ப தோஷ நிவர்த்தி பூஜைகள் அனைத்தும் செய்துள்ளேன்.
இந்த முறை நமது அணி நிச்சயம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. உலக கோப்பையை வென்ற பிறகு மீண்டும் காளகஸ்தி கோவிலுக்கு வந்து தரிசனம் செய்வேன், என்றார்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:44 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications