அதுதான் கோஹ்லி ஸ்டைல்... ஸ்ரீகாந்த் சிலாகிப்பு!
மும்பை: நீண்ட நாட்களாக எந்த சத்தமும் இல்லாமல் இருந்து வந்த முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த் மீண்டும் தலை காட்டியுள்ளார். விராத் கோஹ்லியை அவர் வெகுவாக புகழ்ந்துள்ளார். இந்திய அணியின் சிறந்த கேப்டன்களில் ஒருவராக கோஹ்லி வருங்காலத்தில் திகழ்வார் என்று அவர் பாராட்டியுள்ளார்.
சூழலுக்கேற்ப தன்னை மாற்றிக கொள்ளும் திறமை கோஹ்லியிடம் நிறையவே இருப்பதாகவும் ஸ்ரீகாந்த் கூறியுள்ளார். அந்த வகையில் பென்டாஸ்டிக் கேப்டனாக கோஹ்லி இருப்பார் என்றும் ஸ்ரீகாந்த் பாராட்டியுள்ளார்.
மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் இவ்வாறு பாராட்டினார் ஸ்ரீகாந்த். ஸ்ரீகாந்த் மேலும் கூறியுள்ளதாவது:

பென்டாஸ்டிக்
பென்டாஸ்டிக் கேப்டனாக கோஹ்லி நிச்சயம் திகழ்வார். சூழலுக்கேற்ப அவர் மாறிக் கொள்கிறார். இருக்கும் சூழலை தனக்கு சாதமாக்கிக் கொள்கிறார். அந்த வகையில் அது சிறப்பானது.

3 பார்மிட்டிலும் பிரமாதம்
3 பார்மட்டிலும் அவர் சிறப்பாக ஆடுகிறார். பிரமிக்க வைக்கிறது அவரது ஆட்டம். அடாப்டபிளிட்டி ஸ்கில் இல்லாமல் ஒருவரால் முழுமையான கிரிக்கெட் வீரராக மாற முடியாது.

விட்டுக் கொடுக்காதவர்
மேலும் கோஹ்லி ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டார். வெற்றியை எட்டும் வரை போராடுவார். வெற்றி கிடைக்காது என்றாலும் கூட போராடுவார். அதுதான் விராத் ஸ்டைல்.

கபில் வேற.. கவாஸ்கர் வேற..!
நான் கபி்ல் தேவ், கவாஸ்கர் தலைமையில் ஆடியுள்ளேன். கபில் வேறு, கவாஸ்கர் வேறு. கேப்டனாக இருவரும் வித்தியாசமானவர்கள். கபில் ஒரே சமயத்தில் முழுமை மற்றும் வெற்றிக்குக் குறி வைப்பார். கவாஸ்கருக்கு முதலில் முழுமை, பிறகுதான் வெற்றி.

கபிலால்தான் கோப்பையை வென்றோம்
கபில்தேவின் அந்த ஆட்டிடியூட்தான் நமக்குக் கோப்பையை வென்று கொடுத்தது. மேற்கு இந்தியத் தீவுகளை வீ்ழ்த்த உதவியது. 1983ல் நாம் உலகக் கோப்பையை வெல்ல ஒருவர் காரணம் என்றால் நிச்சயம் அது கபில் தேவ் மட்டும்தான். அவர் தான் முன்னுக்கு நின்று வெற்றிக்கு நம்மை இட்டுச் சென்றார் என்றார் ஸ்ரீகாந்த்.


Click it and Unblock the Notifications