Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவன் ஆடி, அமாவாசைக்கு ஒரு தடவ தான் அடிப்பான்.. ஸ்ரேயாஸ் ஐயரை வெளுத்து வாங்கிய ஸ்ரீகாந்த்.. செம அடி

சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயரை, முன்னாள் இந்திய அணி கேப்டன் ஸ்ரீகாந்த் கடுமையாக விமர்சித்துள்ளார்.

நியூசிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் சேர்க்கப்பட்டுள்ளார்.இதில் டி20 தொடரில் பிளேயிங் லெவனில் இடம் பெற்றார் .

இதன் காரணமாக சிறப்பாக விளையாடிய சஞ்சு சாம்சனுக்கு அணியில் இடம் கிடைப்பதில்லை.

பேட்ஸ்மேனே கிடையாது

பேட்ஸ்மேனே கிடையாது

இதுகுறித்து பலரும் விமர்சித்து வந்துள்ள நிலையில் முன்னாள் தமிழக கிரிக்கெட் வீரரும், இந்திய அணி முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த், ஸ்ரேயாஸ் ஐயரை கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சித்து இருக்கிறார். இது குறித்து பேசிய அவர் ஸ்ரேயாஸ் ஐயர் எல்லாம் ஒரு நல்ல பேட்ஸ்மேனே கிடையாது. கேட்டால் அவர் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக சதம் அடித்தார் என்று சொல்வார்கள்.

அமாவாசைக்கு ஒரு முறை

அமாவாசைக்கு ஒரு முறை

ஸ்ரேயாஸ் ஐயருக்கு கிரிக்கெட்டில் உள்ள எந்த ஷாட்டையுமே சரிவர விளையாட தெரியாது. ஸ்ரேயாஸ் ஐயர் குறித்து என்னிடம் யாரும் பேசி விடாதீர்கள். அவரெல்லாம் ஒரு பேட்ஸ்மேன் கிடையாது. அவன் ஆடிக்கு ஒரு முறை அம்மாவாசைக்கு ஒரு முறை நன்றாக விளையாடுவான். அதற்காக அவரை அணியில் சேர்க்கக்கூடாது.

ஆட்டமிழந்துவிடுவார்

ஆட்டமிழந்துவிடுவார்

நான் எப்போதும் சொல்வது போல் ஸ்ரேயாஸ் ஐயர், ஒரு மோசமான பந்துவீச்சுக்கு எதிராக சிறப்பாக விளையாடுவார். ஆனால் சிறப்பான பந்துவீச்சை எதிர்கொள்ளும்போது ஆட்டம் இழந்து விடுவார். ஸ்ரேயாஸ் ஐயருக்கு நீங்கள் தொடர்ந்து ஒரு ஆறு பவுன்சரை போடுங்கள். அதில் அவன் நிச்சயமாக ஆட்டம் இழந்து விடுவான். ஸ்ரேயாஸ் ஐயர் சுழற் பந்துவீச்சில் மட்டும்தான் அவர் ரன்களை அடிப்பார்.

கடும் விமர்சனம்

கடும் விமர்சனம்

சுழற்பந்துவீச்சை அடித்து விட்டு பெரிய வீரர் போல் காட்டிக் கொள்வார். ஆனால் ஆட்டமிழந்து விட்டால், முகம் பாவனையை காட்டி ஏதோ கடினமாக விளையாடி விக்கெட்டை விழுந்து விட்டார்கள் என்பது போல் காட்டிக் கொள்வார். ஆனால் தவறு அவர் மீது தான் இருந்திருக்கும். நியூசிலாந்து எதிரான மூன்றாவது டி20 போட்டியில் கூட கூடுதல் பவுன்சால் அவர் ஆட்டமிழக்கவில்லை, அடிக்கத் தெரியாமல் கேட்ச் கொடுத்துவிட்டு கோல்டன் டக் ஆகிவிட்டார் என்று கடுமையாக ஸ்ரீகாந்த் அவன் இவன் என்ற வார்த்தையை பயன்படுத்தி விமர்சித்துள்ளார்.

Story first published: Wednesday, November 23, 2022, 20:38 [IST]
Other articles published on Nov 23, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+