For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கோலி சான்சே இல்ல.. நேரலையில் கெட்ட வார்த்தை பேசிய ஸ்ரீகாந்த்.. இதை எப்படி அனுமதிக்கிறாங்க?

தர்மசாலா : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவும் நியூசிலாந்தும் மோதிய ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
274 ரன்கள் என்ற இலக்கை துரத்தும் போது இந்திய அணி விக்கெட்டுகளை இழந்தாலும் விராட் கோலி, ஜடேஜா ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றியை உறுதி செய்தது.

இதில் விராட் கோலி 95 ரன்கள் எடுத்து 5 ரன்களில் சச்சின் சாதனையை சமன் செய்யும் வாய்ப்பை பறி கொடுத்தார். இந்த நிலையில் இந்தப் போட்டியை தமிழில் ஒளிபரப்பு செய்த ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் வர்ணனையில் இருந்த போது கெட்ட வார்த்தை பேசியது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Krish srikanth uses bad word during commentary stint in ind vs NZ world cup game

கிரிக்கெட் வர்ணனையிலே மிகவும் மோசமாக தமிழ் வர்ணனை தான் இருக்கும் என்பது ரசிகர்களின் கருத்தாகும். இதனால் பல ரசிகர்கள் தமிழில் பார்க்காமல் ஆங்கிலத்தில் தான் கிரிக்கெட் போட்டிகளை பார்க்கிறார்கள். மேலும் கேபிளில் இதுதான் வருகிறது என்பதற்காக வேறு வழியின்றி தமிழில் கிரிக்கெட் போட்டியை பார்த்து வருகிறார்கள். தமிழ் கிரிக்கெட் வர்ணனையில் கிரிக்கெட்டை தவிர மற்ற விஷயங்களை தான் மற்றவர்கள் பேசுவார்கள்.

குறிப்பாக பாடல் பாடுவது, வீரர்களை அவமரியாதையாக பேசுவது, மச்சான் என்ற வார்த்தையை அடிக்கடி பயன்படுத்துவது போன்ற அநாகரிகமான கிரிக்கெட் வர்ணனை பெரும்பாலும் இடம்பெறும். இந்த நிலையில் இது அனைத்திற்கும் உச்சமாக முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் நேற்று கிரிக்கெட் வர்ணனை செய்யும்போது விராட் கோலியை பாராட்டுகிறேன் என்ற பெயரில் ஓ என்று தொடங்கும் ஒரு அநாகரீக வார்த்தையை நேரலையில் பயன்படுத்தினார்.

இதைப் பார்த்ததும் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுவே ஆங்கிலத்தில் இது போன்ற வார்த்தைகளை பயன்படுத்தினால் வாழ்நாள் முழுவதும் கிரிக்கெட் வர்ணனை செய்ய முடியாத அளவிற்கு தண்டனைகள் வழங்கப்படும். ஆனால் தமிழில் இது போன்ற வார்த்தையை சிறு குழந்தைகள் பார்க்கும் போது பயன்படுத்தலாமா என்ற கோபம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Story first published: Monday, October 23, 2023, 14:44 [IST]
Other articles published on Oct 23, 2023
English summary
Krish srikanth uses bad word during commentary stint in ind vs NZ world cup game நேரலையில் கெட்ட வார்த்தை பேசிய ஸ்ரீகாந்த்.. இதை எப்படி அனுமதிக்கிறாங்க?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+