For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“விடைபெறுகிறேன்”.. 37 வயதில் ஓய்வை அறிவித்த முன்னாள் சிஎஸ்கே வீரர் கிருஷ்ணப்பா கவுதம்

பெங்களூரு: இந்திய அணியின் முன்னாள் வீரரும், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டருமான கிருஷ்ணப்பா கவுதம், அனைத்து வகையான போட்டி கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவரது 37 ஆகும். இவர் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் உட்பட பல அணிகளில் விளையாடி நாடு முழுவதும் அறியப்பட்டார்.

14 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்திற்குப் பிறகு, பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று (டிச., 22) நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். அப்போது கர்நாடக கிரிக்கெட் சங்கத் தலைவர் வெங்கடேஷ் பிரசாத் மற்றும் கவுதமின் குடும்பத்தினர் உடனிருந்தனர்.

Krishnappa Gowtham Announces Retirement Karnataka All-Rounder Bids Farewell to All Forms of Cricket

இளம் வீரர்களுக்காக வழிவிடுகிறேன்:

ஓய்வு குறித்து கிருஷ்ணப்பா கவுதம் கூறியதாவது: "முதல் தர கிரிக்கெட் மற்றும் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறேன். நான் பலமுறை அணியிலிருந்து நீக்கப்பட்டாலும், போராடி மீண்டும் இடம்பிடித்துள்ளேன். இப்போதும் என்னால் கர்நாடக அணியில் இடம்பிடிக்க முடியும். ஆனால், நான் அணியில் இடம் பிடித்தால், அது வளர்ந்து வரும் இளம் வீரர்களின் வாய்ப்பைப் பறிப்பது போலாகும். அவர்கள் தான் எதிர்காலம் என்பதால் வழிவிடுகிறேன்."

வேறு மாநில அணிக்காக விளையாடும் வாய்ப்பு இருந்தும், கர்நாடக வீரராகவே எனது பயணத்தை நிறைவு செய்ய விரும்பினேன். இதே சின்னசாமி மைதானத்தில் 'பால் பாய்' ஆக நின்றிருக்கிறேன். இன்று இங்கேயே ஓய்வு பெறுவது நிறைவாக உள்ளது" என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.

ஐபிஎல் பயணம் & சாதனை:

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய 5 அணிகளுக்காக விளையாடியுள்ளார்.

குறிப்பாக, 2021 ஐபிஎல் ஏலத்தில் சர்வதேச போட்டியில் அறிமுகமாகாத வீரராக இருந்தபோதே, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இவரை ரூ.9.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது அப்போதைய சாதனையாகப் பேசப்பட்டது. ஐபிஎல் தொடரில் 36 போட்டிகளில் 247 ரன்களும், 21 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

புள்ளிவிவரம் மற்றும் சாதனைகள்:

சர்வதேசம்: இந்தியாவுக்காக 2021-ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக ஒரே ஒரு ஒருநாள் போட்டியில் விளையாடி 1 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

முதல் தர கிரிக்கெட்: 59 போட்டிகளில் 224 விக்கெட்டுகளையும், 1419 ரன்களையும் குவித்துள்ளார்.

கேபிஎல் சாதனை: 2019 கர்நாடக பிரீமியர் லீக் தொடரில் ஒரே போட்டியில் 134 ரன்கள் விளாசியதுடன், பந்துவீச்சில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி உலக சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

தனது 14 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்தில் 395 விக்கெட்டுகள் மற்றும் 2,785 ரன்களைக் குவித்து, தற்போது விடைபெற்றுள்ளார் கிருஷ்ணப்பா கவுதம்.

Story first published: Tuesday, December 23, 2025, 7:31 [IST]
Other articles published on Dec 23, 2025
English summary
Krishnappa Gowtham Announces Retirement: Karnataka All-Rounder Bids Farewell to All Forms of Cricket
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+