Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்னோட உந்துசக்தியே அவன்தான்... பெருமிதம் தெரிவித்த க்ருணால் பாண்டியா

மும்பை : தன்னுடைய உந்துசக்தியாக ஹர்திக் பாண்டியா விளங்குவதாக அவருடைய சகோதரர் க்ருணால் பாண்டியா தெரிவித்துள்ளார்.

ஜிம் பயிற்சிக்கு பிறகு தாங்கள் இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள க்ருணால் பாண்டியா இவ்வாறு கூறியுள்ளார்.

Krunal Pandya Calls Brother Hardik Pandya His Source Of Motivation

லாக்டவுனை ஒட்டி வீட்டில் முடங்கியுள்ள ஹர்திக் மற்றும் க்ருணால் பாண்டியா சகோதரர்கள் சமூக வலைதளங்களில் பரபரப்பாக இயங்கிவருகின்றனர்.

லாக்டவுனையொட்டி மற்ற வீரர்களை போலவே கிரிக்கெட் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர்கள் ஹர்திக் மற்றும் க்ருணால் பாண்டியா சகோதரர்களும் வீட்டில் முடங்கியுள்ளனர். இந்த காலத்தை பயன்படுத்தி இவர்கள் இருவரும் சமூக வலைதளங்களில் அதிகமான அளவில் பதிவுகளை போட்டு வருகின்றனர்.

கடந்த மாதத்தில்கூட வீட்டிற்குள்ளேயே கிரிக்கெட் ஆடும் வீடியோவை பகிர்ந்து ரசிகர்களை கொள்ளை கொண்டனர். வீட்டிற்குள்ளேயே நாம் கொண்டாட்டத்தில் ஈடுபடலாம் என்றும் அவர்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், தற்போது தன்னுடைய இளைய சகோதரர் ஹர்திக் பாண்டியாவுடன் கூடிய புகைப்படத்தை க்ருணால் பாண்டியா தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

தன்னுடைய உந்துசக்தியுடன் ஜிம்மில் பயிற்சி மேற்கொண்டதாக அந்த புகைப்படத்திற்கு கேப்ஷன் வெளியிட்டுள்ளார் க்ருணால் பாண்டியா.

Krunal Pandya Calls Brother Hardik Pandya His Source Of Motivation
Story first published: Wednesday, May 27, 2020, 14:59 [IST]
Other articles published on May 27, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+