Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பாண்டியாவின் பிரதர் இவ்வளவு மோசமா? முக்கிய வீரர்களின் எதிர்காலம் காலி.. வெளியாகும் பரபர தகவல்கள்!

டெல்லி: ஹர்திக் பாண்டியாவின் சகோதரர் குர்னால் பாண்டியா இளம் வீரர்கள் சிலரிடம் நடந்து கொண்ட விதம் பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்துள்ளது.

சையது முஸ்டாக் அலி கோப்பை போட்டிகள் கடந்த ஜனவரி 10ம் தேதி தொடங்கிய நிலையில் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பெங்களூர், கொல்கத்தா, சென்னை, மும்பை, வாதோரா, இந்தூர், அஹமதாபாத் ஆகியோர் நகரங்களில் இந்த போட்டிகள் நடக்க உள்ளது. ஏற்கனவே பல்வேறு தரப்பு போட்டிகள் குழுக்களுக்கு உள்ளே நடந்துவிட்டது.

மொத்தம் 22 நாட்கள் இந்த போட்டிகள் நடக்க உள்ளது. ஜனவரி இறுதிவரை இந்த கிரிக்கெட் தொடர் நடக்கிறது. மொத்தம் 38 அணிகள் 6 குழுக்களாக பிரிக்கப்பட்டு இந்த போட்டிகள் நடக்கிறது.

எப்படி

எப்படி

இந்த தொடரில் பரோடா அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவின் சகோதரர் குர்னால் பாண்டியா இருக்கிறார்.இவர்தான் அணி தேர்வில் முக்கிய பங்கு வகிக்கிறார். இந்த நிலையில் அணி தேர்வில் இவர் ஆதிக்கம் செலுத்தி முக்கியமான வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை, அணியில் இருக்கும் வீரர்களை இவர் தேவையில்லாமல் சீண்டுகிறார் என்று புகார் வைக்கப்பட்டுள்ளது.

சண்டை

சண்டை

அதன்படி அணியின் துணை கேப்டன் தீபக் ஹுடாவை இவர் தொடர்ந்து கிண்டல் செய்து மோசமாக நடத்தி இருக்கிறார். ஐபிஎல்லில் பிரபலமானவர் குர்னால் பாண்டியா. இதன் காரணமாக அணியில் இருக்கும் மற்ற இளம் வீரர்களை மிகவும் மோசமாக நடத்தி வருகிறார்.

முடியவில்லை

முடியவில்லை

இவரின் தொல்லை தாங்க முடியாமல் பரோடா அணியில் இருந்தே தற்போது தீபக் ஹூடா வெளியேறிவிட்டார். பயிற்சியின் போது குர்னால் பாண்டியா மிகவும் மோசமாக நடந்து கொண்டதாக தீபக் ஹூடா தெரிவித்து உள்ளார். இந்த சம்பவம் பரோடா அணிக்குள் பெரிய பிரச்னையை ஏற்படுத்தி உள்ளது.

விலகல்

விலகல்

இது மட்டுமின்றி பல இளம் வீரர்களை அணியில் எடுக்க கூடாது என்றும் குர்னால் பாண்டியா உத்தரவிட்டுள்ளார்.கடந்த வருடம் பரோடா அணியில் அதிக ரன் எடுத்த வீரரான ஆதித்யா வாக்மோட் இந்த முறை பரோடா அணியில் எடுக்கப்படவில்லை. இதற்கு குர்னால் பாண்டியாதான் காரணம் என்று கூறப்படுகிறது. இவர்தான் இளம் வீரர்கள் பலரை எடுக்க கூடாது என்று கூறி இருக்கிறார்.

விசாரணை

விசாரணை

பரோடா அணியில் தனக்கு போட்டியாக இருக்கும் வீரர்களை எடுக்க கூடாது என்பதில் குர்னால் பாண்டியா உறுதியாக இருக்கிறார். இதனால்தான் அவர் தீபக் ஹுடாவை வெளியேற்ற காரணமாக இருந்துள்ளார். குர்னால் பாண்டியாவின் செயல்களை விசாரிக்கும் எண்ணத்தில் பரோடா அணி நிர்வாகம் உள்ளது. குர்னால் பாண்டியா பாரபட்சமாக செயல்பட்டாரா என்பதை பரோடா அணி நிர்வாகம் விரைவில் விசாரிக்க உள்ளது.

Story first published: Wednesday, January 13, 2021, 13:26 [IST]
Other articles published on Jan 13, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+