Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

படுக்கையை பயன்படுத்தி டேபிள் டென்னிஸ்... பாண்டியா சகோதரர்களின் வித்தியாசமான விளையாட்டு

டெல்லி : இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் வீட்டிற்குள் முடங்கியுள்ளனர்.

ஐபிஎல் போட்டிகளும் காலவரையன்றி ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடவுள்ள பாண்டியாசகோதரர்கள் அதை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், சமூக வலைதளங்களில் இருவருமே மிகவும் பிசியாக பல்வேறு பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர். அவற்றில் சிலபல போட்டிகளும் பயிற்சிகளும் காணப்படுகின்றன.

வீட்டிற்குள் முடங்கிய வீரர்கள்

வீட்டிற்குள் முடங்கிய வீரர்கள்

கொரோனா வைரஸ் காரணமாக நாடுமுழுவதும் வரும் 3ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் விளையாட்டு வீரர்கள் குறிப்பாக கிரிக்கெட் வீரர்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளனர். சமூக வலைதளங்கள் மூலமாக அவர்கள் தங்களது பயிற்சிகள், விளையாட்டுகள், குதூகலங்கள், கொண்டாட்டங்கள் உள்ளிட்டவற்றை ரசிகர்களுக்கு கடத்தி வருகின்றனர்.

பாண்டியா சகோதரர்கள் பிசி

பாண்டியா சகோதரர்கள் பிசி

இந்நிலையில், சமூக வலைதளங்கள் மூலமாக பாண்டியா சகோதரர்கள் தொடர்ந்து பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர். தன்னுடைய காதலி நடாஷாவுடன் மேற்கொள்ளும் கொண்டாட்டங்களையும் ஹர்திக் பாண்டியா பகிர்ந்து வருகிறார். மேலும் பிட்னஸ் பயிற்சிகள் உள்ளிட்டவற்றையும் பாண்டியா சகோதரர்கள் இருவரும் இணைந்தே மேற்கொண்டு பகிர்கின்றனர்.

பாண்டியா சகோதரர்களின் கண்டுபிடிப்பு

பாண்டியா சகோதரர்களின் கண்டுபிடிப்பு

இந்நிலையில் தங்களுடைய படுக்கையை பயன்படுத்தி கைகளின் உதவியுடன் ரப்பர் பந்தை கொண்டு வித்தியாசமான டேபிள் டென்னிஸ் விளையாட்டை இருவரும் தங்களது வீட்டில் விளையாடியுள்ளனர். இந்த வீடியோவை குருணால் பாண்டியா தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் போஸ்ட செய்துள்ளார்.

யாரு ஜெயிச்சிருப்பாங்க?

யாரு ஜெயிச்சிருப்பாங்க?

இந்த வீடியோவிற்கு கேப்ஷனும் வெளியிட்டுள்ளார் குருணால் பாண்டியா. பாண்டியா சகோதரர்கள் வித்தியாசமான விளையாட்டை விளையாடிக் கொண்டிருப்பதாகவும், தானும் ஹர்திக் பாண்டியாவும்தான் போட்டியாளர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், இந்த ரவுண்டில் யார் ஜெயித்திருப்பார்கள் என்று யூகிக்க முடிகிறதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Story first published: Friday, April 24, 2020, 15:03 [IST]
Other articles published on Apr 24, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+