Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஜடேஜா அந்த விஷயத்தில் மாறுபட்டிருந்தால்.. எனக்கு அணியில் வாய்ப்பு கிடைத்திருக்கும்.. சாஹலின் ட்ரிக்!

ஜடேஜா மட்டும் அந்த விஷயத்தில் மாறுபட்டிருந்தால் தனக்கும், குல்தீப் யாதவுக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடர் பாதியில் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் கிரிக்கெட் ரசிகர்களின் பார்வை ஒட்டுமொத்தமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் பக்கம் திரும்பியுள்ளது.

இதற்கான இந்திய அணியில் பகிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகுந்த ஆச்சரியம் அளித்தது. அதற்கு காரணம் குல்தீப் - யுவேந்திர சாஹலுக்கு பதிலாக அஸ்வின் மற்றும் ஜடேஜா மீண்டும் அணியில் வாய்ப்பு பெற்றது தான்.

 குல்தீப் - சாஹல்

குல்தீப் - சாஹல்

இந்திய அணியில் சுழற்பந்துவீச்சு துறையில் பிரிக்க முடியாத ஜோடியாக ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் திகழ்ந்தனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அணியில் அவர்களின் வாய்ப்புக்கு ஆப்பு வைத்தவர்கள் குல்தீப் யாதவ் மற்றும் யுவேந்திர சாஹல் ஜோடி. இவர்கள் இருவரும் தொடக்க காலத்தில் 60 - 70 கிமீ வேகத்தில் மெதுவாக பந்துவீசுவார்கள். இதனால் பேட்ஸ்மேன்கள் திணறி அடுத்தடுத்து விக்கெட்கள் விழும். ஆனால் காலப்போக்கில் அதனை சுதாரித்துக்கொண்ட பேட்ஸ்மேன்கள் அவர்களின் பந்துக்காக பொறுத்திருந்து துவம்சம் செய்தனர்.

வாய்ப்பு இல்லை

வாய்ப்பு இல்லை

சமீபத்தில் நடைபெற்ற இங்கிலாந்து எதிரான டி20 தொடரில் சாஹலுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. அதிலும் அவர் சோபிக்கவில்லை. ஆனால் குல்தீப்பிற்கு அந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. அதே போல ஐபிஎல் தொடரிலும் குல்தீப் யாதவ் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. ஆர்சிபி அணிக்காக ஆடிய யுவேந்திர சாஹல் 8 போட்டிகளில் விளையாடி 4 விக்கெட்களை மட்டுமே எடுத்தார். இதன் காரணமாகவே இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

அதுதான் பிரச்னை

அதுதான் பிரச்னை

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள சாஹல், நானும் குல்தீப் யாதவும் சேர்ந்து விளையாடிய போது ஹர்திக் பாண்டியா வேகப்பந்துவீச்சாளராக அணியில் இருப்பார். ஆனால் கடந்த 2018ம் ஆண்டு ஹர்திக்கிற்கு காயம் ஏற்பட்டதில் இருந்து ஜடேஜா அணிக்கு திரும்பினார். ஏனென்றால் அவர் 7வது இடத்தில் பேட்டிங்கிலும் நன்கு உதவக்கூடியவர். ஒருவேளை ஜடேஜா மட்டும் வேகப்பந்துவீச்சாளராக இருந்திருந்தால் எனக்கும், குல்தீப்பிற்கு வாய்ப்பு கிடைத்திருக்கும். ஏனென்றால் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டருக்கு அணியில் அதிக தேவை உள்ளது.

நம்பிக்கை இருக்கிறது

நம்பிக்கை இருக்கிறது

ஒரு தொடரை எடுத்துக்கொண்டால் நானும் - குல்தீப்பும், 50 - 50% போட்டிகளில் விளையாடுவோம். சில நேரங்களில் எனக்கு மட்டும் வாய்ப்பு கிடைக்கும். ஹர்திக் இருக்கும் வரை எங்கள் இருவருக்கும் அணியில் வாய்ப்பு உள்ளது. தற்போது அணியில் இடம் இல்லை என்றாலும் கவலையில்லை, இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டும் போதும்.

Story first published: Friday, May 21, 2021, 17:04 [IST]
Other articles published on May 21, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+