Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

22 மாத காத்திருப்புக்கு பலன்.. அஸ்வின் ரெக்கார்டை அடித்து உடைத்த குல்தீப் யாதவ்.. ஆச்சரியமா இருக்கே

சட்டோகிராம்: வங்கதேச அணியுடனான டெஸ்ட் தொடரில் அஸ்வின் மற்றும் அனில் கும்ப்ளே ஆகியோரின் சாதனைகளை அடித்து நொறுக்கியுள்ளார்.

இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சட்டோகிராமில் உள்ள மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதலில் சில தடுமாற்றங்களை சந்தித்த போதும் முதல் இன்னிங்ஸில் 404 ரன்களை குவித்து ஆல் அவுட்டானது. இதனை தொடர்ந்து விளையாடிய வங்கதேச அணி 150 ரன்களுக்கெல்லாம் சுருண்டது.

வங்கதேச டெஸ்ட் தொடர்

வங்கதேச டெஸ்ட் தொடர்

வங்கதேச அணிக்கு எதிராக பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்தது குல்தீப் யாதவ் தான். கடைசியாக 2021ம் ஆண்டு பிப்ரவரியில் விளையாடி அவர், 22 மாதங்களுக்கு பிறகு தற்போது தான் டெஸ்ட் அணிக்கு திரும்பியுள்ளார். ஆனால் முதல் போட்டியிலேயே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். பேட்டிங்கில் 40 ரன்களை அடித்த அவர், பவுலிங்கில் 5 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.

குல்தீப் பந்துவீச்சு

குல்தீப் பந்துவீச்சு

மொத்தமாக 16 ஓவர்களை வீசிய குல்தீப் யாதவ் 5 முக்கியமான விக்கெட்களை கைப்பற்றினார். அஹற்காக வெறும் 40 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்திருந்தார். இதன் மூலம் இந்திய கிரிக்கெட்டில் பெரும் சாதனையை குல்தீப் படைத்துள்ளார். அதாவது வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகச்சிறப்பான பவுலிங் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

புள்ளிவிவரம்

புள்ளிவிவரம்

இதற்கு முன்னர் அஸ்வின் மற்றும் அனில் கும்ப்ளே ஆகியோர் இருந்தனர். கடந்த 2015ம் ஆண்டு அஸ்வின் 5 விக்கெட்களை இழந்து 87 ரன்களை விட்டுக்கொடுத்திருந்தார். அதற்கு முன்னர் அனில் கும்ப்ளே 4 விக்கெட்களை கைப்பற்றி 55 ரன்களை விட்டுக்கொடுத்திருந்தார். இதனையெல்லாம் முந்தி தான் தற்போது குல்தீப் யாதவ் புதிய ரெக்கார்ட்-ஐ வைத்துள்ளார்.

இனி அசைக்க முடியாது

இனி அசைக்க முடியாது

ஜடேஜா, யுவேந்திர சாஹல், அஸ்வின் ஆகியோர் இருந்ததால் இந்திய அணியில் இருந்து கிட்டத்தட்ட வெளியேற்றப்பட்டிருந்த குல்தீப் யாதவுக்கு கடந்த சில நாட்களாக தான் வாய்ப்புகள் மீண்டும் கிடைத்து வருகிறது. குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இனி யாராலும் தன்னை ஒதுக்கவே முடியாது என்பது போன்ற அட்டகாச ரெக்கார்டை படைத்துவிட்டு சென்றுள்ளார்.

Story first published: Friday, December 16, 2022, 13:08 [IST]
Other articles published on Dec 16, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+