சத்தியம்.. சத்தியம்.. சத்தியம்..! தோனி பத்தி நான் அப்படி சொல்லவே இல்லை..!! பல்டியடித்த அவர்
மும்பை:தோனி குறித்து தான் தவறாக எதுவும் பேசவில்லை என்றும், அவர் மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பதாகவும் குல்தீப் யாதவ் விளக்கம் அளித்து உள்ளார்.
விருது விழா ஒன்றில் கலந்துகொண்ட இந்திய கிரிக்கெட் அணியின் சுழல் பந்து வீச்சாளரான குல்தீப் யாதவிடம் தோனி குறித்த சில கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு அவர் அளித்த பதிலில், தோனி அளித்த பல டிப்ஸ் தவறாக போய் இருக்கிறது. அது பற்றி அவரிடம் கேட்க கூட முடியாது என்று தெரிவித்திருந்தார்.

ஐபிஎல் இறுதியில் சென்னை தோற்றிருந்த நிலையில், குல்தீப் யாதவின் இந்த பகீர் குற்றச் சாட்டு பெரும் விவாதத்தை கிளப்பியது. இந் நிலையில், தோனி குறித்து தான் தவறாக பேச வில்லை என்று குல்தீப் யாதவ் விளக்கம் அளித்து உள்ளார்.
இது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் அவர் அளித்துள்ள விளக்கத்தில் கூறி இருப்பதாவது: தோனி மீது எனக்கு மிகப்பெரிய அளவில் மரியாதை இருக்கிறது. நான் அவரைப்பற்றி கூறியதாக பரவும் தகவல்களில் சிறிதும் உண்மையில்லை. அவை அனைத்தும் முற்றிலும் பொய்.

யாரோ சமூகவலை தளத்தில் என் பெயரை வைத்து தவறாக தகவலை பரப்பி வருகின்றனர். சிலர் அதனை ஷேர் செய்து இருக்கின்றனர். தோனி மிகச் சிறந்த வீரர். அவரைப் பற்றி நான் ஒருபோதும் தவறாக பேசியதில்லை.
மேலும் அவருக்கும் எனக்கும் தனிப்பட்ட முறையில் நல்ல பிணைப்பு உள்ளது. ஆனால் தேவையின்றி ஏன் பிரச்னையை கிளப்புகிறார்கள் என்று தெரிய வில்லை என்று கூறினார்.


Click it and Unblock the Notifications