Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஜடேஜா (அ) குல்தீப் யாதவ்.. உலகக்கோப்பையில் எல்லா போட்டிகளிலும் ஆடப் போகும் ஸ்பின்னர் யார்?

Recommended Video

உலகக்கோப்பையில் எல்லா போட்டிகளிலும் ஆடப் போகும் ஸ்பின்னர் யார்?- வீடியோ

மும்பை : இந்திய அணியில் முன்னணி சுழற் பந்துவீச்சாளராக வளர்ந்து வரும் குல்தீப் யாதவ் உலகக்கோப்பை அணியில் இணைந்து அனைத்து போட்டிகளிலும் ஆடுவார் என சூசகமாக தெரிவித்துள்ளார் ரவி சாஸ்திரி.

குல்தீப் யாதவ் பந்துவீச்சை சமாளிக்க எதிரணி பேட்ஸ்மேன்கள் திணறி வருவது இயல்பான ஒரு விஷயமாக மாறி வரும் நிலையில், அவரை உலகக்கோப்பையில் முக்கிய வீரராக பயன்படுத்த இந்திய அணி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ஜடேஜாவை விட குல்தீப் ஏன் முக்கியம்?

டெஸ்ட் வாய்ப்பு

டெஸ்ட் வாய்ப்பு

குல்தீப் யாதவ் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மட்டுமே தொடர்ந்து அடி வந்த நிலையில், ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் கடைசி போட்டியில் மட்டும் ஆடும் வாய்ப்பு பெற்ற அவர் ஒரு இன்னிங்க்ஸில் 5 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினார்.

வாய்ப்பு அதிகம்

வாய்ப்பு அதிகம்

இதையடுத்து குல்தீப்புக்கு இந்திய அணியில் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறுகையில் "குல்தீப் யாதவ் ரிஸ்ட் ஸ்பின்னர் என்பதால் உலகக்கோப்பையில் ஒவ்வொரு போட்டியிலும் அவரை ஆட வாய்ப்பு உள்ளது. இருவிரல் ஸ்பின்னர்களை விட ரிஸ்ட் ஸ்பின்னர்கள் தான் இப்போது எங்களுக்கு தேவை" என கூறினார்.

யார் யாருடன் போட்டி?

யார் யாருடன் போட்டி?

ஒருநாள் அணியை பொறுத்தவரை சாஹல், ஜடேஜா ஆகியோரோடு போட்டி போடுகிறார் குல்தீப் யாதவ். எனினும், அவர்களை விட குல்தீப் யாதவுக்கு தான் வாய்ப்பு அதிகம். ஜடேஜா பேட்டிங்கிலும் கை கொடுப்பார் என்பதால் அவருக்கும் அதிக போட்டிகளில் வாய்ப்பு கிடைக்கலாம்.

அடுத்த தொடர்கள்

அடுத்த தொடர்கள்

இந்தியா தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மூன்று ஒருநாள் போட்டிகளிலும், அடுத்து நியூசிலாந்து அணிக்கு எதிராக ஐந்து ஒருநாள் போட்டிகளிலும் ஆட உள்ளது. இதை தொடர்ந்து மீண்டும் ஆஸ்திரேலியாவோடு இந்தியாவில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மோதுகிறது.

உலகக்கோப்பைக்கு முன்னோட்டம்

உலகக்கோப்பைக்கு முன்னோட்டம்

இந்த போட்டிகள் உலகக்கோப்பைக்கு ஒரு முன்னோட்டமாக அமையும் என்பதால் ஒவ்வொரு வீரரும் தன் திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். அடுத்து வரும் போட்டிகளில் எந்த ஸ்பின்னர் அதிக விக்கெட் வீழ்த்துகிறார்கள் என பார்க்கலாம்.

Story first published: Thursday, January 10, 2019, 18:20 [IST]
Other articles published on Jan 10, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+