டி20 உலககோப்பையில் குல்தீப் யாதவ்.. தென்னாப்பிரிக்க தொடரில் கலக்கியதன் எதிரொலி.. யாருக்கு பதிலாக?
டெல்லி : தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் கலக்கி வரும் குல்தீப் யாதவை டி20 உலககோப்பையில் சேர்க்க வாய்ப்பு எற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டி20 உலககோப்பைக்கான இந்திய அணியில் அஸ்வின், சாஹல், அக்சர் பட்டேல் உள்ளனர். ரிசர்வ் வீரராக ரவி பிஸ்னாய் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ரவி பிஸ்னாய் ரன்களை வாரி வழங்கினார்.

இந்திய அணி
இதனால், அடுத்த ஒருநாள் போட்டியில் அவர் பிளேயிங் லெவனில் இருந்து நீக்கப்பட்டார். ரவி பிஸ்னாய், சாஹலை போல் ஒரு லேக் ஸ்பின்னர். திறமைகள் இருந்தும், அவருக்கு இன்னும் அனுபவம் போதவில்லை. ஆனால் அனுபவமும், திறமையும் நிறைந்த குல்தீப் யாதவை, டி20 உலககோப்பையில் ரிசர்வ் வீரராக கூட சேர்க்கவில்லை.

குல்தீப் செயல்பாடு
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 8 ஓவர் வீசி 1 விக்கெட் வீழ்த்தி 39 ரன்களை மட்டுமே விட்டு கொடுத்தார். இதே போன்று 2வது டி20 போட்டியில் 9 ஓவர்களை வீசி 49 ரன்களை விட்டு கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். தற்போது இன்றைய ஆட்டத்தில் 18 ரன்களை விட்டு கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

அணிக்கு திரும்ப வாய்பபு
மேலும், குல்தீப் யாதவ் வீசும் பந்துகளை எதிர்கொள்ள தென்னாப்பிரிக்க வீரர்கள் திணறுகின்றனர், இதனால், அவருடைய பந்துவீச்சு டி20 உலககோப்பைக்கு இந்திய அணிக்கு தேவைப்படும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் வலியுறுத்தினர். இந்த நிலையில், ரவி பிஸ்னாயின் இருப்பு இந்தியாவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தாது.

2 மாற்றம்
இதனால் குல்தீப் யாதவை அணியில் சேர்க்க பிசிசிஐயே யோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ரிசர்வ் வீரராக இல்லை என்றாலும், பயிற்சிக்காகவது குல்தீப் ஆஸ்திரேலியா செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே போன்று பும்ராவுக்கு பதில் முகமது சிராஜை அனுப்ப பிசிசிஐ முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications