Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பாவம்யா குல்தீப் யாதவ்.. கடைசி நொடி வரை திரும்பி கூட பார்க்காத கோலி.. காலையில் நடந்த பரிதாப சம்பவம்

சென்னை: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் குல்தீப் யாதவ் எடுக்கப்படாதது பெரிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான ஆடும் இந்திய அணியில் ரோஹித் சர்மா, சுப்மான் கில், புஜாரா, கோலி, ரஹானே, பண்ட், வாஷிங்க்டன் சுந்தர், அஸ்வின், இஷாந்த் சர்மா, பும்ரா, சபாஷ் நதீம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

குல்தீப் யாதவ்

குல்தீப் யாதவ்

இந்த போட்டியில் இந்திய அணியில் குல்தீப் யாதவ் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இவர் கடந்த ஐபிஎல் தொடரில் முழுக்க பெஞ்சில் உட்கார வைக்கப்பட்டார். அந்த தொடர் முழுக்க குல்தீப் யாதவிற்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.

மோசம்

மோசம்

அதன்பின் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் குல்தீப் யாதவ் ஆடவில்லை. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடர் முழுக்க குல்தீப் யாதவ் உட்கார வைக்கப்பட்டார். இன்று நடக்கும் டெஸ்ட் போட்டியில் குல்தீப் யாதவ் சேர்க்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்றும் குல்தீப் யாதவிற்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.

மோசமான நிலை

மோசமான நிலை

இன்று அக்சர் பட்டேல் காயம் அடைந்தார். இதனால் குல்தீப் யாதவ் அணிக்குள் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்று சம்பந்தமே இல்லமே சபாஷ் நதீம் அணிக்குள் கொண்டு வரப்பட்டுள்ளார். 15 பேர் அணியில் இல்லாத நதீமை உள்ளே கொண்டு வந்து, அவரை ஆடும் அணியில் எடுத்துள்ளனர் .

கோபம்

கோபம்

இந்த சம்பவம் கண்டிப்பாக குல்தீப் யாதவை கோபத்திற்கு உள்ளாக்கி இருக்கும். சென்னையில் தனது பார்மை நிரூபிக்கலாம் என்று அதிக ஆர்வமாக இருந்தார் குல்தீப் யாதவ். ஆனால் இன்று அவர் எடுக்கப்படவில்லை.

காலையில் என்ன நடந்தது

காலையில் என்ன நடந்தது

இன்று காலையில்தான் அக்சர் பட்டேல் காயம் அடைந்தது தெரிந்தது. இதனால் வெறும் 2 நிமிடத்தில் புதிய வீரர் அணிக்குள் கொண்டு வரப்பட்டுள்ளார். ஒன்றரை வருடமாக இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் குல்தீப் யாதவ் கஷ்டப்பட்டு வருவது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Story first published: Friday, February 5, 2021, 10:07 [IST]
Other articles published on Feb 5, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+