Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"ஒரே பேட்டியில் உயர்ந்த உள்ளம்" - ஏமாற்றமோ, வருத்தமோ இல்லை.. குல்தீப்க்கு இவ்வளவு பெரிய மனசா ?

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இந்திய அணி பந்துவீச்சாளரான குல்தீப் யாதவும் சிறப்பாக பந்துவீசி ஜொலித்தார்.

குறிப்பாக டெல்லியில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் 4.1 ஓவர் வீசி 18 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட் கைப்பற்றினார்.

ஆனால் சிறப்பாக செயல்பட்டும் டி20 உலக கோப்பை அணியில் இடம்பெறவில்லை. ரிசர்வ் வீரராக ரவி பிஸ்னாய் தான் இடம்பெற்றுள்ளார்.

ஏமாற்றம் இல்லை

ஏமாற்றம் இல்லை

இதனால் உலக கோப்பையில் இடம் பெறாதது குறித்து வருத்தமோ ஏமாற்றமோ இல்லை என்று குல்தீப் கூறியுள்ளார்.இது குறித்து பேசிய அவர், நான் செயல் முறையை மட்டுமே நம்புகிறேன். பயிற்சியில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன். ஒவ்வொரு போட்டியிலும் எப்படி முன்னேற்றம் அடைவது என்பது குறித்து நான் கவனம் செலுத்துகிறேன்.

கடினமான கேள்வி

கடினமான கேள்வி

சிறந்த வீரர்களை தான் அணியில் தேர்வு செய்வார்கள் என்பதால் எனக்கு எவ்வித ஏமாற்றமும் இல்லை. சாஹலுடன் கூட்டணி அமைத்து பந்து வீசுவதை நீங்கள் மிஸ் செய்கிறீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர் இது கொஞ்சம் கடினமான கேள்வி அவர் t20 உலக கோப்பைக்காக ஆஸ்திரேலியாவில் விளையாடுகிறார்.

வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள்

அதற்காக என்னுடைய வாழ்த்துக்களை நான் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் மிக சிறப்பாக பந்துவீசுவார் என நம்புகிறேன். ஒருநாள் போட்டியில் நான் தொடர்ந்து கவனம் செலுத்துகிறேன். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பிஸ்னாய் ரன்களை வாரி வழங்கினார்.ஆனால் அவர் அணியில் இருக்கிறார். அதே போல தான் சாஹலும் ஒரு லெக் ஸ்பின்னர். இதனால் பிஸ்னாயின் இருப்பு எவ்வித முக்கியத்துவத்தையும் கொடுக்காது.இதனால் குல்தீப் தான் அணியில் சேர்க்க வேண்டும் என்று பலரும் கூறி வருகின்றனர

அஸ்வின் பாராட்டு

அஸ்வின் பாராட்டு

இதேபோன்று தமிழக வீரர் அஸ்வின், குல்தீப் யாதவை வெகுவாக பாராட்டியுள்ளார். ஒரே இடத்தில் தொடர்ந்து பந்து வீசி பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி அளிக்கக்கூடிய திறமை இருப்பதால் அவர் டெஸ்ட் போட்டியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று கூறியிருக்கிறார். ஆஸ்திரேலியாவில் இதுவரை மூன்று டி20 போட்டியில் குல்தீப் யாதவ் விளையாடி நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். சராசரியாக 5.50 ரன்களை ஒரு ஓவரில் கொடுத்திருக்கிறார்.

Story first published: Wednesday, October 12, 2022, 18:35 [IST]
Other articles published on Oct 12, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+