Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பாகிஸ்தானுக்கு கண்டிப்பாக சென்று சாம்பியன்ஸ் கோப்பையில் விளையாடுவோம்.. இந்திய வீரர் குல்தீப் கருத்து

மும்பை : வரும் 2025 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற உள்ள சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு தாங்கள் வரமாட்டோம் என இந்தியா ஏற்கனவே அறிவித்துள்ளது. மேலும் ஹைபிரிட் முறையில் இந்தியா விளையாடும் போட்டிகளை வேறு நாட்டில் நடத்த வேண்டும் என்றும் பிசிசிஐ வலியுறுத்தி இருக்கிறது.

இந்த நிலையில் இந்தியாவின் நட்சத்திர சுழற் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ், பாகிஸ்தானுக்கு தாங்கள் கண்டிப்பாக சென்று விளையாடுவோம் என்று கூறி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

cricket champions trophy 2025 india cricket team pakistan kuldeep yadav

இந்திய அணி கடைசியாக 2008ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை தொடருக்காக தான் பாகிஸ்தானுக்கு சென்றது. அதன் பிறகு 16 ஆண்டுகளாக பாகிஸ்தானுக்கு இந்தியா செல்லவில்லை. அது மட்டுமல்லாமல் கடைசியாக இரு அணிகளும் இருதரப்பு போட்டிகளில் பங்கேற்று 12 ஆண்டுகள் ஆகிறது. வெறும் ஐசிசி தொடர்களில் மட்டும்தான் இரு அணிகளும் பங்கேற்று வருகின்றன.

இந்த நிலையில் சாம்பியன்ஸ் கோப்பை தொடர் பாகிஸ்தானில் நடத்தப்படுகிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள குல்தீப் யாதவ், ஒரு கிரிக்கெட் வீரராக நாங்கள் எங்கு அனுப்பினாலும் அங்கு சென்று விளையாடுவோம். நான் இதுவரை பாகிஸ்தானுக்கு சென்றதே கிடையாது. இதனால் நான் மிகுந்த எதிர்பார்ப்புடன் சாம்பியன்ஸ் கோப்பை தொடரை காத்துக் கொண்டிருக்கின்றேன்.

பாகிஸ்தான் மக்கள் மிகச்சிறந்தவர்கள் எப்போதெல்லாம். எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போதுதான் நாங்கள் கண்டிப்பாக சென்று அங்கு விளையாடுவோம் என்று குல்தீப் கூறி இருக்கிறார். பிசிசிஐ தங்கள் அணி வீரர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி வந்த நிலையில் தற்போது இந்திய வீரர் ஒருவரே தாங்கள் பாகிஸ்தானுக்கு செல்ல மிகவும் ஆர்வமுடன் இருக்கிறோம் என்று கூறி இருப்பது சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இது பிசிசிஐ எடுத்திருக்கும் முடிவுக்கு நேர்மாறான கருத்து என்பதால் குல்தீப் யாதவ் பிசிசிஐயை கண்டிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. தற்போது குல்தீப் யாதவின் இந்த கருத்தை பயன்படுத்தி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐசிசி இடம் முறையிட வாய்ப்பு இருக்கிறது. இதனால் குல்தீப்க்கு சிக்கல் உருவாகலாம். நடப்பு இந்திய அணியில் விராட் கோலி ரோஹித் சர்மா என எந்த வீரரும் பாகிஸ்தானுக்கு சென்று கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, August 27, 2024, 8:28 [IST]
Other articles published on Aug 27, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+