Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கண்ணீர்.. உணர்ச்சியை அடக்க முடியாமல் தடுமாறிய மூத்த இந்திய வீரர்.. 2 வருட போராட்டத்திற்கு விடை!

சென்னை: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் முதல் விக்கெட்டை எடுத்த குல்தீப் யாதவ் மிகவும் உணர்ச்சிகரமாக காணப்பட்டார்.

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் தற்போது இந்திய அணி வெற்றியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. 7 விக்கெட்டை இழந்த நிலையில் இங்கிலாந்து அணி மிகப்பெரிய தோல்வியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது.

இங்கிலாந்து அணி 300 ரன்கள் வித்தியாசத்தில் இந்த டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைவதற்கான சூழ்நிலைகள் ஏற்பட்டு உள்ளது.

எப்படி

எப்படி

இந்த நிலையில் இன்று இந்திய அணியில் ஆடிய குல்தீப் யாதவ் மிகவும் சிறப்பாக பவுலிங் செய்தார்.இந்திய அணியில் குல்தீப் யாதவ் எடுக்கப்பட்டு இருந்தாலும் முதல் இன்னிங்சில் இவருக்கு பெரிய அளவில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. பெரிய அளவில் குல்தீப் யாதவிற்கு ஓவர்கள் கொடுக்கப்படவில்லை.

6 ஓவர்கள்

6 ஓவர்கள்

முதல் இன்னிங்சில் குல்தீப் யாதவிற்கு வெறும் 6 ஓவர்கள் மட்டுமே கொடுக்கப்பட்டது. அதுவும் கூட கடைசி கட்டத்தில் மட்டுமே இவருக்கு ஓவர் கொடுக்கப்பட்டது. இரண்டாவது இன்னிங்சிலும் இதேபோல் 45 ஓவர்கள் முடிந்த பின்புதான் அஸ்வினுக்கு ஓவர் கொடுக்கப்பட்டது.

 ஓவர்

ஓவர்

ஆனால் தனக்கு லேட்டாக வாய்ப்பு கிடைத்தாலும் குல்தீப் யாதவ் அதை சரியாக பயன்படுத்திக் கொண்டார். தொடர்ந்து சிறப்பான பந்துகளை குல்தீப் யாதவ் வீசி வந்தார். தன்னை பீல்டிங் நிற்க வைத்து அவமானப்படுத்துகிறார்கள் என்று கருதாமல் குல்தீப் யாதவ் சிறப்பாக பவுலிங் செய்து வந்தார்.

விக்கெட்

விக்கெட்

அதன்படி சரியாக பவுலிங் செய்து ரூட் விக்கெட்டை எடுக்க முயற்சி செய்தார்.ஆனால் குல்தீப் யாதவ் நேரம் ரூட் கொடுத்த கேட்சை சிராஜ் மிஸ் செய்தார். ஆனால் குல்தீப் யாதவ் இதை பற்றி எல்லாம் கவலைப்படாமல் தொடர்ந்து பவுலிங் செய்தார். இவருக்கு ஏற்றபடி பீல்டிங் மாற்றப்பட்டது.

பீல்டிங்

பீல்டிங்

நிற்க வைக்கப்பட்ட பீல்டிங்கிற்கு ஏற்றபடி பந்தை முறையாக தூக்கி வீசினார் குல்தீப் யாதவ். நினைத்தபடி அந்த பந்தில் போக்ஸ் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். 2 வருடத்திற்கு பின் விக்கெட் எடுத்த மகிழ்ச்சியில் குல்தீப் யாதவ் கண்ணீர் விட தொடங்கினார். முகம் முழுக்க இவருக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

 வாய்ப்பு

வாய்ப்பு

2 வருடமாக குல்தீப் யாதவிற்கு வாய்ப்பே வழங்கப்படவில்லை. ஐபிஎல் தொடரிலும் இவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஆஸ்திரேலிய தொடரிலும் இவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. இந்த நிலையில் 2 வருடத்திற்கு பின் இப்போதுதான் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு தற்போது விக்கெட் எடுத்துள்ளார்.

Story first published: Tuesday, February 16, 2021, 17:27 [IST]
Other articles published on Feb 16, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+