For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனி டீமில் ஆடினா எங்களுக்கு ஈஸியா இருக்கும்.. வெளியே சொல்ல முடியாத கஷ்டம்.. உருகிய இளம் வீரர்!

மும்பை : இந்திய அணியில் இளம் சுழற் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ், தோனி டி20 உலகக்கோப்பை அணியில் ஆடினால் தங்களுக்கு எளிதாக இருக்கும் என கூறி உள்ளார்.

Recommended Video

Kuldeep Yadav wants Dhoni to play in 2020 T20 World cup

தோனி இருந்த வரை குல்தீப் யாதவ் விக்கெட் வேட்டை ஆடினார். அணியின் முன்னணி சுழற் பந்துவீச்சாளராக இருந்தார்.

தோனி இல்லாத நிலையில் அவரால் தோனி விக்கெட் கீப்பராக அளித்த யோசனைகளை பெற முடியவில்லை.

பாதிப்பு

பாதிப்பு

தோனி இல்லாத நிலையில் அவரது பார்ம் மங்கி வருகிறது. இடையே அணியில் விக்கெட் கீப்பராக இருந்த ரிஷப் பண்ட் இளம் வீரர் என்பதோடு நிறைய தவறுகள் செய்ததும் பந்துவீச்சாளர்களை பாதித்தது. இப்படிப்பட்ட சூழலில் தான் தோனி அணியில் ஆடினால் நன்றாக இருக்கும் என கூறி உள்ளார் குல்தீப் யாதவ்.

தோனி விடுப்பு

தோனி விடுப்பு

தோனி 2019 உலகக்கோப்பை தொடருக்கு பின் இந்திய அணியில் இடம் பெறவில்லை. அவராகவே இந்திய அணியை விட்டு விலகி இருப்பதாக கூறப்பட்டது. நீண்ட காலம் இந்திய அணியில் ஆடாத நிலையில், அவரது பிசிசிஐ ஒப்பந்தம் கூட ரத்து செய்யப்பட்டது.

மீண்டும் வர முயற்சி?

மீண்டும் வர முயற்சி?

இந்த நிலையில், அவர் மீண்டும் இந்திய அணியில் இடம் பெற முயற்சி செய்து வருகிறார் எனவும், 2020 ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடி அணியில் அவர் நுழைவார் எனவும் கூறப்பட்டது. அதே போல, எப்போதும் இல்லாத வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி முகாமில் அசத்தினார் தோனி.

கொரோனா வைரஸ் தாக்கம்

கொரோனா வைரஸ் தாக்கம்

இதற்கிடையே, கொரோனா வைரஸ் உலகில் பெரிய அச்சுறுத்தலாக மாறி அனைத்து மக்களையும் வீட்டில் முடக்கி வைத்துள்ளது. விளையாட்டுப் போட்டிகள் பாதிக்கப்பட்டன. கிரிக்கெட் போட்டிகளும் தடைப்பட்டுள்ளன. 2020 ஐபிஎல் தொடர் இந்த ஆண்டு நடக்குமா? என்பதே சந்தேகத்தில் உள்ளது.

டி20 உலகக்கோப்பையில் சந்தேகம்

டி20 உலகக்கோப்பையில் சந்தேகம்

இந்த நிலையில், தோனி தன் பார்மை நிரூபிக்காமல் இந்திய அணியில் இடம் பெற வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது. அதனால், 2020 டி20 உலகக்கோப்பை தொடரிலும் தோனி இடம் பெற முடியாது என்றே தெரிகிறது.

மூத்த வீரர் தோனி

மூத்த வீரர் தோனி

இந்த நிலையில், குல்தீப் யாதவ் தோனி இல்லாததை தான் உணர்வதாகவும், மூத்த வீரர்களோடு ஆடும் போது ஒரு பிணைப்பு ஏற்படும். அதனால், அவர் இல்லாததை தான் வெகுவாக உணர்வதாக கூறினார். குல்தீப் யாதவ்வுக்கு தோனி ஆலோசனை கூறி, அவர் விக்கெட் எடுத்த நிகழ்வுகள் மிக மிக அதிகம் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

அணியில் ஆட வேண்டும்

அணியில் ஆட வேண்டும்

தோனியின் ஓய்வை பொறுத்தவரை அது அவரது தனிப்பட்ட முடிவு. அதை அவரிடமே விட்டு விட வேண்டும். அதில் விவாதம் செய்ய வாய்ப்பே இல்லை. அதே சமயம் அவர் ஃபிட்டாக இருக்கிறார். அவர் இந்தியாவுக்கு ஆட வேண்டும் என நான் தனிப்பட்ட முறையில் விரும்புகிறேன். அவர் ஆடினால் எங்களுக்கு எளிதாக இருக்கும் என இளம் வீரர்கள் சார்பாக கூறினார் குல்தீப் யாதவ்.

Story first published: Friday, May 8, 2020, 19:56 [IST]
Other articles published on May 8, 2020
English summary
Kuldeep Yadav wants Dhoni to play in 2020 T20 World cup
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+