Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நீங்க கடைசியா ஒழுங்கா ஆடுனது எப்போ?..மூத்த வீரரிடம் கேள்வி கேட்ட தேர்வுக்குழு.. கடும் குற்றச்சாட்டு

சிட்னி: இந்திய அணியின் மூத்த வீரராக இருக்கும் குல்தீப் யாதவிற்கு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு கிடைக்காமல் போகலாம் என்கிறார்கள்.

இந்தியா இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் போட்டி வரும் பிப்ரவரி 5ம் தேதி நடக்க உள்ளது. இந்த தொடரில் ஆட உள்ள இங்கிலாந்து வீரர்கள் தற்போது சென்னை வந்துள்ளனர்.

இந்திய அணி வீரர்களும் தற்போது சென்னை வந்துள்ளனர். இவர்களுக்கு கொரோனா சோதனை நெகட்டிவ் வந்த நிலையில் இன்னும் சில நாட்களில் இவர்கள் பயிற்சியை தொடங்க உள்ளனர்.

பயிற்சி

பயிற்சி

இந்த தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டி சென்னையில் நடக்கிறது. இதற்கான இந்திய அணி விவரம் நேற்று வெளியாகி உள்ளது. அதன்படி விராட் கோலி, ரோஹித் சர்மா, சுப்மான் கில், மயங்க் அகர்வால், புஜாரா, ரஹானே, பண்ட், சாகா, பாண்டியா, கே. எல் ராகுல், பும்ரா, இஷாந்த் சர்மா, சிராஜ், ஷரத்துல் தாக்கூர், அஸ்வின், குல்தீப், வாஷிங்க்டன் சுந்தர், அக்சர் பட்டேல் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சிக்கல்

சிக்கல்

இந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் தொடரில் குல்தீப் யாதவிற்கு வாய்ப்பு கிடைக்குமா என்று கேள்வி எழுந்துள்ளது. கடந்த வருட ஐபிஎல் சீசன் முழுக்க இவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. பார்ம் அவுட் காரணமாக இவர் வாய்ப்பு பெறவே இல்லை.

இந்திய அணி

இந்திய அணி

அதன்பின் ஆஸ்திரேலிய கிரிக்கெட் தொடரில், தொடர் முழுக்க வாய்ப்பு கிடைக்காமல் இவர் கஷ்டப்பட்டு வந்தார். ஒரு போட்டியில் கூட வாய்ப்பு கிடைக்காமல் கடைசி வரை குல்தீப் யாதவ் சும்மா உட்கார்ந்து இருந்தார். இந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலும் இவருக்கு வாய்ப்பு கிடைக்காது என்கிறார்கள்.

ஏன்

ஏன்

இவர் சரியாக ஆடவில்லை. கடைசியாக இவர் சரியாக ஆடி பல மாதங்கள் இருக்கும். வலைப்பயிற்சியில் கூட இவர் சரியாக பந்து வீசுவது இல்லை என்று தேர்வுக்குழு இவரை புறக்கணித்து உள்ளது. அதேபோல் இவர் பேட்டிங்கும் சரியாக செய்ய மாட்டார். இதனால் இவரை எடுக்க வேண்டாம் என்ற மனநிலையில் தேர்வுக்குழு உள்ளது.

 ஜடேஜா

ஜடேஜா

ஜடேஜா இல்லாத நிலையில் அவரின் இடத்தில் ஸ்பின் பவுலிங் மற்றும் பேட்டிங் செய்ய கூடிய அக்சர் பட்டேல் அல்லது வாஷிங்க்டன் சுந்தரை களமிறக்க கோலி முடிவு செய்துள்ளார். அஸ்வின் , வாஷிங்க்டன் சுந்தர் , அக்சர் இவர்கள் மூன்று பேரில் இரண்டு பேர் காயம் அடைந்தால் மட்டுமே குல்தீப் யாதவிற்கு வாய்ப்பு கிடைக்கும் என்கிறார்கள்.

Story first published: Friday, January 29, 2021, 9:43 [IST]
Other articles published on Jan 29, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+